December 3, 2021, 12:20 pm
More

  ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்து இஸ்லாத்துக்கு மதமாற்றம்! விசாரிப்பது என்.ஐ.ஏ.,!

  இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மனிதர், இந்திய பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு புகார் மனு அனுப்பினார்.

  dyfi sfi girl - 1

  மாணவிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மயங்கிய சிறுமியை பலாத்காரம் செய்து, பின்னர் நிர்வாணமாகப் படம் எடுத்து, மதம் மாறக் கட்டாயப் படுத்தி மிரட்டிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவரது 18 வயது மகள் கோழிக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அங்குள்ள கோச்சிங் சென்டரில் டியூஷனுக்கு சென்றபோது கோழிக்கோடு நடுவன்னூர் பகுதியைச் சேர்ந்த முகமது காசிம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில் சரோவரம் பயோ – பார்க் பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த மாணவியை அங்குள்ள ஜூஸ் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளான் முகமது காசிம். அங்கே மாணவிக்கு தெரியாமல் ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளான். அதைக் குடித்து மயக்கமான பெண்ணை காரில் அழைத்துச் சென்று லாட்ஜ் அறையில் வைத்து பலாத்காரம் செய்துள்ளான்.

  பின்னர் மாணவியை நிர்வாணமாக படம் எடுத்து, அந்தப் படத்தைக் காட்டி மாணவியை மதம் மாறக் கூறி மிரட்டியுள்ளான்.

  நடந்த இந்தச் சம்பவங்களை தனது தந்தையிடம் அந்த மாணவி கூற, இதனால் அதிர்ச்சி அடைந்த அறிந்த மாணவியின் தந்தை கோழிக்கோடு போலீசில் புகார் அளித்தார். ஆனால், அவரது புகாரின் பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

  பெண்ணின் தந்தை, நடக்காவு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அஷ்ரஃப், மெடிக்கல் காலேஜ் சர்கிள் இன்ஸ்பெக்டர் மூஸா, சிட்டி போலீஸ் கமிஷ்னர் ஏ.வி.ஜார்ஜ் ஆகியோரை தொடர்பு கொண்டு, இந்த விவகாரம் குறித்து முறையிட்டார். ஆஅனால், சிட்டி போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார், இந்த விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று கூறி, சமரச முயற்சிக்கு ஏற்பாடு செய்தாராம். குற்றம் சாட்டப்பட்டவரை தப்ப விடுவதிலும், காப்பாற்றுவதிலும், இந்த விவகாரம் பெரிதாகி விடக் கூடாது என்று மறைப்பதிலும் குறிப்பாக செயல்பட்டனராம்.

  love - 2

  முன்னதாக கோழிக்கோடு பகுதியில் லவ் ஜிஹாத் பெருமளவில் இந்துப் பெண்களைக் குறிபார்த்து இயங்கியதாகவும், தற்போது கிறிஸ்துவப் பெண்களைக் குறிவைத்து லவ்ஜிஹாத் இயங்குவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

  இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மனிதர், இந்திய பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு புகார் மனு அனுப்பினார்.

  அவரது புகாரின் படி இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய உளவு அமைப்பு விசாரணையை தொடங்கியது.

  இதைத் தொடர்ந்து, அந்த மாணவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாணவியை பலாத்காரம் செய்த முகமது காசிம் இதுபோல் மேலும் பலரை பலாத்காரம் செய்து கட்டாய மதமாற்றம் செய்திருக்கலாம் என்று உளவுத்துறை கருதுகிறது. இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த போது, கேரள காவல் துறை மீது பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்தச் சம்பவம் தற்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

  1 COMMENT

  1. காலிகோட் முஸ்லிம்கள் அதுவும் மலபார் முஸ்லிம்கள் அதிகம் உள்ள இடம் சமீபத்தில் இலங்கையில் உள்ள முஸ்லீம் அமைப்பை சேர்ந்த சிலர் அங்கு தஞ்சம் அடைந்ததாக தினசரி நாளிதழ்களில் சேதிகள் வந்தன

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,779FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-