முஸ்தபா கமால் ராஜினாமா: ஐசிசி ஏற்பு

உலகம்

ICC-mustafa-kamaal துபை; சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் இன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது பதவி விலகலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தத் தகவலை ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, முஸ்தபா கமால் தனது ராஜினாமா கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகவும் தனது முடிவுக்காக ஐசிசியின் அனைத்து அசோசியேட் உறுப்பினர்களிடமும் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

ALSO READ:  அமெரிக்க தேர்தலில் பின்னடைவு; தோல்விக்கு காரணம் சொன்ன டிரம்ப்!