கொரோனா: இந்தியாவை சேர்ந்த அபுதாபி ஆசிரியர் உயிரிழப்பு!

உலகம் கல்வி
corono 10 - 2026

அபுதாபியில் உள்ள பள்ளியில் மூத்த ஹிந்தி ஆசிரியராக இருந்தவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். இந்தியாவை சேர்ந்த 50 வயதான ஹிந்தி ஆசிரியர், அபுதாபியில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கடந்த மே 7ம் தேதி இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவர் விரைவில் குணமடைய வேண்டி அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் அவரது மனைவி, இவர்களது குழந்தைகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நோய்த் தொற்றால் இன்று (மே 24) பரிதாபமாக உயிரிழந்தார்.இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், ஹிந்தி ஆசிரியர் கையாண்ட வகுப்புகளுக்கு ஆக்கப்பூர்வமான அம்சத்தை கொண்டு வந்தார். அவரது வகுப்புகளில் கலந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கும். மாணவர்களுக்கு சிறந்ததை ஊக்குவிக்கும் அவரை இழந்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினர்களுக்கு இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.