டிக்டாக்: முழுமையாக வாங்க மைக்ரோசாப்ட் முயற்சி!

உலகம் தொழில்நுட்பம் வணிகம்
tiktok

டிக்டாக்கின் அமெரிக்க பங்குகளை வாங்குவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவராத்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை முழுமையாக வாங்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

முந்தைய தகவல்களில் டிக்டாக் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பகுதிக்கான பிரிவுகளை வாங்க மைக்ரோசாப்ட் திட்டமிடுவதாக கூறப்பட்டது. தற்போதைய தகவல்களின் படி மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கின் இந்தியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளையும் சேர்த்து வாங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

டிக்டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்த இறுதி முடிவை மைக்ரோசாப்ட் நிறுவனம் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் எடுக்க வேண்டும், ஒருவேளை டிக்டாக்கை வாங்காத பட்சத்தில் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.