நீச்சல் குளத்தில் மூழ்கியவனை … கைகொடுத்து காத்த 3 வயது சிறுவன்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
boy-save-his-friend-in-pool
boy-save-his-friend-in-pool

சிறுவனை காப்பாற்றிய மூன்று வயது சிறுவன்.

3 வயதிலேயே நீச்சல் குளத்தில் மூழ்க இருந்த தன் நண்பனை காப்பாற்றிய ஒரு சிறுவன் ஹீரோவாக நின்றுள்ளான்.

இந்த சம்பவம் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. இதுதொடர்பான வீடியோவை அந்த மூன்று வயது சிறுவனின் தாய் தன் சோஷல் மீடியா அக்கவுண்டில் போஸ்ட் செய்துள்ளார்.

தன் மகன் ஆர்தர் அவனுடைய நண்பனோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் அந்த நண்பன் தண்ணீரில் விழுந்து விட்டான். அருகிலேயே ஸ்விம்மிங் பூல், நீர் குட்டைகள் இருக்கும் போது குழந்தைகளின் பெற்றோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக மாறியுள்ளது.

இந்த வீடியோவில் நீச்சல் குளத்தில் உள்ள வளையங்களைப் பிடிப்பதற்காக ஆர்தரும் அவனுடைய நண்பனும் குனிந்து முயற்சித்து வருகிறார்கள். அப்போது ஆர்தரின் நண்பன் எதிர்பாராமல் தண்ணீர் குளத்தில் விழுந்து விட்டான். உடனே ஆர்தர் பெரியவர்களை சத்தம் போட்டு கூப்பிட்டு எச்சரித்ததோடு அல்லாமல் அந்த சிறுவனையும் கூட கையை நீட்டி காப்பாற்றிவிட்டான்.

இந்த சம்பவங்கள் எல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. அதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆர்தரை ரியல் ஹீரோ என்று பாராட்டி வருகிறார்கள்.

அதோடு கூட இதைப் பார்த்த போலீஸார் ஆர்தருக்கு நல்ல பரிசு கூட அளித்தார்கள். கூடை நிறைய சாக்லேட்டுகள் அளித்ததோடு கூட ஒரு மெடலும் சர்டிபிகேட்டும் பரிசாக அளித்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.