மழையில் சூரியனார் கோவில்! அற்புதக் காட்சியை ட்விட்டில் பகிர்ந்த பிரதமர்!

Published:

suriyanar-kovil

குஜராத் மாநிலம், மோதேராவில் உள்ள சூரிய கோயில் புஷ்பவதி நதிக்கு அருகில் அமைந்துள்ளது. இது சோலங்கி ஆட்சியாளர்களின் மரபையும் புகழையும் கட்டிடக் கலையையும் எடுத்துக்காட்டும் சின்னமாக உள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் மொதேராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சூரியனார் கோயிலின் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்

மழை நாளில் இந்த கோயிலை காண்பது ஒரு அற்புதக் காட்சியாக இருப்பதாக தலைப்பிட்டு அந்த வீடியோவைப் பிரதமர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

பிரதமர் வெளியிட்ட 55 வினாடிகள் கொண்ட வீடியோவில், கோயிலின் படிகளில் மழை நீர் ஓடுவதைக் காண முடிகிறது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img