December 5, 2025, 7:46 PM
26.7 C
Chennai

வைகோ., தோளில் மீண்டும் கருப்புத் துண்டு போடக் காத்திருக்கும் நாஞ்சிலார்!

nanjil sampath new 19305 - 2025

மீண்டும் மதிமுகவில் நாஞ்சில் சம்பத் இணைவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன. அதற்குக் காரணம்,  நாஞ்சில் சம்பத் கூறியுள்ள சில புகழுரைகள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பிதாமகன் கதாநாயகன் வைகோதான் என்று கூறியுள்ள நாஞ்சில் சம்பத், தேவைப்பட்டால் மீண்டும் வைகோவோடு மக்கள் போராட்டங்களில் இணைந்து செயல்பட தயார் என்று அறிவித்துள்ளார்.

நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடியதும் தூத்துக்குடி மக்கள் வைகோவுக்கு விழா எடுப்பார்கள் என்று நாஞ்சில் சம்பத் கூறுவதில் இருந்து, இப்போதே வைகோ பக்கத்தில் ஒரு துண்டு போட்டு விட்டுக் காத்துக் கிடக்கிறார் நாஞ்சில் சம்பத் என்ற பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன.

அதிமுக.,வில் இணைந்து இன்னோவா சம்பத் என்று பேர் வாங்கியவர், பின்னர் அதிமுக., தினகரன் அணி என்று ஒட்டிக் கொண்டிருந்தவரை, ஒரு மாதிரியாகப் பேசி வந்தார். தினகரன் தனிக் கட்சி, தனிக் கொடி என்று தனிப் பயணம் மேற்கொண்ட போது, கட்சிக் கொடியில்  அண்ணாவையும், கட்சிப் பெயரில் திராவிடத்தையும் தேடிப் பார்த்துக் களைத்துப் போய், இனி கட்சி அரசியலே வேண்டாம் என்று அரசியல் துறவறம் பூண்டுவிட்ட நாஞ்சில் சம்பத்,  அதன் பின்னர் இலக்கியக் களனில் புகுந்து, இலக்கிய இளம்பயிர்களை வளர்க்கப் போகிறேன் என்று சபதம் எடுத்தார்.

ஆனால் இப்போது மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற பழமொழிக்கேற்ப, தொடக்கத்தில் பேர் கொடுத்த கட்சியில் முடிவுரை எழுதப் புறப்பட்டு விட்டாரோ என்று சந்தேகப் படும் விதமாய் வைகோ குறித்து புகழுரையைக் கிளறி, ஊடக உலகில் அரசியல் புயலைக் கிளப்பி விட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories