மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ., நீட் தேர்வின் மூலமே மருத்துவக் கல்வி பயில முடியும் என்ற நிலையைக் கொண்டு வந்த பின்னர், நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி வழங்கியது. இந்த இலவசப் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களில், 1,337 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஸ்பீட் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் மாவட்டங்கள் தோறும் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி அளித்தது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 412 இடங்களில் நடைபெற்ற இந்த நீட் தேர்வு இலவச பயிற்சியில் 8,445 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அரசின் இலவச பயிற்சி பெற்று நீட் தேர்வெழுதிய மாணவர்களில் 1,337 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் அதிக பட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தின் 195 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 173 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவாக நீலகிரி மாவட்டத்தில் 3 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.




