
‘தனுசு ராசி நேயர்களே’. இப்படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கி இருக்கிறார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை தொடர்ந்து, நடிகர் ஹரிஷ் கல்யாண் இதில் நடித்துள்ளார்.
ரொமான்டிக் காமெடியை மையப்படுத்தி, இப்படம் உருவாகியுள்ளது. இதில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்ரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்.இது குறித்து இயக்குநர் சஞ்சய் பாரதி கூறியதாவது: இசையமைப்பாளர் அனிருத், கல்லூரியில் எனக்கு ஜூனியர். என்னுடைய நெருங்கிய நண்பர்.தனுசு ராசி நேயர்களே படத்தில், அவரு ஒரு பாடலை பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.

அவரை தொடர்பு கொண்டு, விஷயத்தைச் சொன்னதும், பாடுகிறேனே என்றார். அதன்படியே, ஹீரோ அறிமுக பாடலாக வரும், திருமணத்திற்கு எனக்கு ஒரு பெண் தேவை எனத் துவங்கும் பாடலை, அனிருத் பாடி இருக்கிறார். அந்தப் பாடல், அடுத்த வாரம் வெளியிடப்படும். வரும் நவம்பரில், படத்தை ரிலீஸ்செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.