
இன்றைய நாகரீகமான சமூகத்தை பொறுத்தவரை, சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் சமூக வலைதளம் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.
உலகின் ஏதோ ஒரு முலையில் நடக்கும் செய்தியையும், ஒவொருவரின் வீட்டிற்குள்ளும் அவரவா் கைக்கும் கொண்டு வர இந்த சமூக வலைத்தளம் பெரிதும் உதவி வருகிறது.
இந்நிலையில், ட்வீட்டரில் இனி அரசியல் ரீதியிலான விளம்பரங்கள் இனி அனுமதிக்கப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்வீட்டர் நிறுவன தலைமை நிர்வாகி ஜேக் டோர்சே கூறுகையில் ‘ தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளின் டிஜிட்டல் பிரச்சார காலமாக சமூக வலைத்தளங்கள் இருக்கும் நிலையில், ட்வீட்டர் இனி அரசியல் ரீதியிலான விளம்பரங்களை அனுமதிக்காது என்றும், ஒட்டுமொத்தமாக அரசியல் விளம்பரங்களை தடை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த திட்டம் அடுத்த மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூறியுள்ளனர்.



