சுபாஷிதம்: கல்வி ஒரு நிரந்தர சாதனை!

subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

17. கல்வி ஒரு நிரந்தர சாதனை!

செய்யுள்:

ஆசார்யாத் பாதமாதத்தே பாதம் சிஷ்ய: ஸ்வமேதயா|
பாதம் சப்ரஹ்மசாரிப்ய: பாதம் காலக்ரமேண ச||

பொருள்:

ஞானத்தை, குருமார்களிடம் இருந்து கால் பங்கு, சொந்த புத்தியால் கால் பங்கு, சக மாணவர்களிடம் இருந்து கால் பங்கு பெறுகிறோம். மீதி கால் பங்கு காலம் செல்லச் செல்ல அனுபவம் மூலம் அடைகிறோம்.

விளக்கம்:

ஞானத்தை அடையும் வழி நான்கு முகங்களோடு கூடியது. அனைவரும் எப்போதும் மாணவர்களே என்கிறது இந்த ஸ்லோகம். எத்தகைய கல்வியானாலும் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறோம் என்பதை விவரிக்கும் ஸ்லோகம் இது.

தாய், தந்தை, ஆசிரியர் ஆகியோர் குருமார்கள் என்ற பிரிவில் அடங்குவர். இவர்கள் மூலம் கால்பங்கு ஞானம் கிடைக்கிறது. சுயமான அறிவுத்திறனால் மீதி கால்பந்து ஞானம் பெறுகிறான் மனிதன். அடுத்த கால் பங்கு தன்னோடு பயிலும் சக மாணவர்களைப் பார்த்து கற்றறிகிறான்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

சிலரைப் பார்த்து இவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் சிலரைப் பார்த்து இவ்வாறு இருக்கக் கூடாது என்பதையும் கற்றுக் கொள்வான். கடைசி கால் பங்கு ஞானத்தை காலப்போக்கில் வாழ்க்கை கற்றுத்தரும். காலம் அளிக்கும் அனுபவம் அபாரமானது. அனுபவம்  விலைமதிப்பில்லாதது. அதனால் மனிதன் எப்போதும் மாணவனாகத் திகழ வேண்டும்.

முழுமையான ஞானம் கிடைக்க வேண்டுமென்றால் கற்ற கல்வியை வாழ்வோடு இணைத்துக் கொள்ள வேண்டும். காலப்போக்கில் அது நலமளிக்கும். அதாவது முழுமையான ஞானத்தைப் பெறுவது நம்முடைய கையில்தான் உள்ளது. நம் முயற்சியே அதற்கு சாதனம். சுயமாக வாழ்வில் பெறும் அனுபவத்தின் மூலமாக ஞானம் முழுமையடைகிறது. ஞானம் பெறுவதற்கு குரு எத்தனை தேவையோ சுய முயற்சியும் அத்தனை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories