ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்!

ஆன்மிகக் கட்டுரைகள் ஸ்ரீசிருங்கேரி மகிமை
sringeri-swamigal
sringeri-swamigal

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

மூன்றுவிதமான வாஸனைகளான லோக வாஸனை, சாஸ்திர வாஸனை மற்றும் தேஹ வாஸனை ஆகியவை பிறப்பு இறப்புச் சக்கரமாகிய சிறையில் உள்ள ஒரு மனிதனைக் கட்டியுள்ள உறுதியான இரும்புச் சங்கிலிகள் போலுள்ளன. இந்தச் சங்கிலிகள் நம்மிடமிருந்து விலகி விட்டால்தான் நாம் சிறையிலிருந்து விடுபட முடியும். ஆகவே, எது வரையில் இத்தகைய வாஸனைகளை வளர்த்துக் கொள்கிறோமோ அது வரையில் நாம் பந்தத்தைத்தான் வளர்த்துக் கொள்கிறோம். பந்தத்திலிருந்து விடுதலையை விரும்பினால், நாம் இந்த வாஸனைகளிலிருந்து விடுபட வேண்டும். அதற்கு குருவின் கருணையும் இறைவனது அருளும் தேவை.

சாஸ்திர வாஸனையைப் பற்றி கூறும் போது வித்யாரண்யர்,
குருகருணாரஹிதஸ்ய சாஸ்த்ரவ்யஸனம் வ்யஸனமேவ பவதி
என்றார். “குருவின் கருணை இல்லாதவனுக்கு சாஸ்த்ர வ்யஸனம் துன்பமாகத்தான் இருக்கும்” என்று கூறுகிறார். ஏனெனில், ஆத்ம ஞானம் வராமல் சாஸ்திரம் மட்டும் கற்றிருந்தால் அது உபயோகமில்லை.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்..

குசேலன் பகவானுடைய ஸந்நிதிக்குச் சென்றபோது தனக்கு “இது வேண்டும், அது வேண்டும்” என்றெல்லாம் சொல்லவில்லை..ஒரு பிடி அவலை பகவானிடம் கொடுத்தான், “இதனால் கிருஷ்ண பரமாத்மா ஸந்தோஷமாகட்டும்” என்ற ஒரே எண்ணத்தில் கொடுத்தான்..பகவான் அதை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு ” தனக்கு திருப்தியாய்விட்டது” என்றார்..

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

அதே ஸமயத்தில் குசேலன் குபேரனாகிவிட்டான்..ஸர்வக்யனான பகவானிடம் நாம் ஒன்றும் கேட்கவேண்டியதில்லை, என்பதற்கு இது ஒன்று போதாதா..! அதனால் நாம் செய்யும் நல்ல காரியமோ பூஜையோ ப்ரசாரத்திற்காக அல்ல..அதனால் ஈசுவரன் திருப்தி அடைய வேண்டும்.. அதனால் தான் பீஷ்மர் ” யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னர: ஸதா” என்று கூறி, பக்தியினால் ஒருவன் பகவான் நாமத்தை ஜபித்தால், அதுவே பெரிய தர்மம், என்று சுட்டிக் காட்டினார்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.