ஆபிரகாமிய மதமாற்ற முயற்சிகளுக்கு தடுப்புச் சுவராக… இலங்கை சிவசேனை!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
maravanpulavu sachithanandam
maravanpulavu sachithanandam

ஆபிரகாமிய மதமாற்றம் முயற்சிகளுக்கு தடுப்புச் சுவராகக் கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிவசேனை இருப்பதாக அதன் இலங்கை பொறுப்பாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்தவை…

தென்மராட்சி கல்வி வலயத்தில் கல்லூரி நிலையம். அருள்மிகு ஐயப்பன் நோன்புக் காலம். இல்லத்தார் அனைவரும் நோன்பில். அவர் வீட்டு மாணவரும் நோன்பில். வகுப்பு ஏற்றத் தேர்வுக் காலம் மார்கழி.
அருள்மிகு ஐயப்பன் நோன்புக் காலமும் மார்கழி.

மாணவர் தேர்வு எழுத வருகிறார் சீருடை அணிய வில்லை கருப்பு உடை அணிந்து வருகிகிறார். தேர்வு அறைக்குள் அம் மாணவரை நுழைய விடவில்லை. அவ்வாறு கறுப்பு உடையுடன் வந்த ஏனைய சில மாணவர்கள் வேறு தேர்வு அறைக்குள் நுழைந்து தேர்வு எழுதினார்கள்

ஆனால் இந்த மாணவன் தேர்வை எழுதக் கூடாது எனத் தேர்வு ஆசிரியர் நுழைவை மறுக்கிறார். மாணவனை வீட்டுக்குத் திருப்பி அனுப்புகிறார். மாணவனின் பெற்றோர் சிவசேனை அமைப்பைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எவ்வாறோ என் தொலைப்பேசி எண்ணை அறிந்தார்கள். எனக்குத் தொலைபேசியில் செய்தி சொன்னார்கள்.

தேர்வு அறைக்குள் நுழைவு மறுத்த ஆசிரியர் கிறிஸ்தவராம்! ஒரு மணி நேரத்தில் சிவசேனை சார்பில் கல்வி நிலைய முதல்வர் அலுவலகத்தில் தொண்டர்கள். அதே நேரத்தில் காவல் நிலைய அலுவலர்கள் யாவரையும் அனுப்பிவைத்தேன்.

கல்வி நிலைய முதல்வருக்கு நடந்த நிகழ்ச்சி தெரியாது. சிவசேனைத் தொண்டர்களும் காவல் நிலையத்தாரும் அவரைச் சந்திக்கும் வரை! கறுப்பு உடையுடன் நோன்பு காலத்தில் மாணவர் வரலாம் தேர்வு எழுதலாம் என முதல்வர் சிவசேனைத் தொண்டர்களிடமும் காவல் நிலையத்தாரிடமும் கூறினார்.

கிருத்தவ ஆசிரியரை அழைத்துக் கண்டித்தார் மீண்டும் அவ்வாறு நடக்க கூடாது என பணித்தார். அதே கிருத்தவ ஆசிரியர் சில மாதங்களுக்குள் மாற்றலாகி வேறு கல்வி நிலையத்திற்கு போகிறார். அங்கே மாணவர்களை கிறித்தவ சமயத்திற்கு மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார் எனச் சிவசேனைக்குச் செய்தி வந்தது

இன்று காலை சிவசேனைத் தொண்டர்கள் மூவர் தென்மராட்சி கல்வி வலயத்திலுள்ள அந்தக் கல்வி நிலையத்திற்குச் சென்றார்கள். முதல்வரையும் துணை முதல்வரையும் சந்தித்தார்கள் கிருத்துவ ஆசிரியரின் மதமாற்ற முயற்சிகளை எடுத்துக் கூறினார்கள்

அவ்வாறு தொடர விடமாட்டோம் என முதல்வரும் துணை முதல்வரும் உறுதியளித்த பின் திரும்பினார்கள். அதே நேரத்தில் தென்மராட்சிக் கல்வி வலையத்திலிருந்து அலுவலர்கள் அந்த கல்வி நிலையத்திற்குச் சென்று விசாரித்தார்கள். இதனால் அந்தக் கல்வி நிலையத்தில் பரபரப்பு.

அந்தக் கிருத்துவ ஆசிரியரை விரைந்து இடமாற்றம் செய்து கிருத்தவப் பள்ளிக்கு அனுப்புமாறு சிவசேனைத் தொண்டர் கல்வி வலையத்தைக் கேட்டிருக்கிறார்கள். ஆபிரகாமிய மதமாற்றம் முயற்சிகளுக்கு தடுப்புச் சுவராகக் கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிவசேனை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.