வசந்தகுமார் மறைவு: தலைவர்கள் புகழஞ்சலி!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
vasanthakumar-H
vasanthakumar-H

தமிழக காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்தவரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான வசந்தகுமார் எம்பி இன்று மாலை காலமானார் அவரது மறைவுக்கு தேசிய தலைவர்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வசந்தகுமார் இன்று மாலை 7 மணியளவில் காலமானதாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது 

இந்நிலையில் வசந்தகுமார் மறைவுக்கு தேசிய தலைவர்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்  அரசியல்வாதிகள் தலைவர்கள் பலரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்பட பலரும் தங்கள் இதயபூர்வ அஞ்சலியை தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.