சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி டீனுக்கு கொரோனா பாதிப்பு!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
corona virus

தமிழகத்தில் மே 22 வெள்ளிக்கிழமை இன்று மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 14,753 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 98 ஆகவும் அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் மொத்தமாக 14753 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில் சென்னையில் இன்று மட்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் மருத்துவர்களும் கொரோனா பாதிப்புக்கு அதிக அளவில் ஆளாகி வருகின்றனர். சென்னையில் ஏற்கெனவே 20க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இந் நிலையில் இன்று அரசு ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.