உ.பி.: துர்கா விசர்ஜன ஊர்வலம் மீது முஸ்லிம்கள் திட்டமிட்ட வகையில் கல்வீச்சு! 8 பேர் கைது!

உ.பி.: துர்கா விசர்ஜன ஊர்வலம் மீது முஸ்லிம்கள் திட்டமிட்ட வகையில் கல்வீச்சு! 8 பேர் கைது!

balrampur

பால்ராம்பூர், உ.பி.: மசூதியைக் கடந்து செல்லும் போது பேண்ட் வாத்திய இசை நிறுத்தப்படாததால், துர்கா பூஜா விசர்ஜன ஊர்வலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கற்களை எறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் போலீஸார் வழக்கு பதிவு செய்து 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

நவராத்திரி மற்றும் துர்கா பூஜா முடிவடைந்த நிலையில், அதிர்ச்சியூட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. சமூகப் பதற்றத்தைத் தூண்டிய உத்தர பிரதேசத்தின் பால்ராம்பூரில் இருந்து வெளியான அந்த வைரல் வீடியோவில், துர்கா பூஜா விசர்ஜன ஊர்வலம் இஸ்லாமியர்களின் கல் வீச்சால் கொடூரமாகத் தாக்கப்படுவதைக் கண்டு நாடெங்கிலும் பலர் கொதித்துப் போயுள்ளனர். இந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் விதத்தில், காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 8 பேரைக் கைது செய்துள்ளனர்.

பால்ராம்பூர் போலீசார் சமூக ஊடக வலைத் தளமான ட்விட்டரில் இதற்கு பதிலளித்துள்ளனர். துர்கா பூஜா விசர்ஜன் ஊர்வலம் மீது தாக்குதல் மற்றும் கல் வீசியது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், சம்பந்தப்பட்ட மீதமுள்ள நபர்களை கைது செய்ய காவல்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் உறுதிப் படுத்தியுள்ளனர்.

அந்த வீடியோவில், இளைய வயது இஸ்லாமியர்கள் தான் என்றில்லை… வயதான முஸ்லீம் ஆண்கள் கூட விசர்ஜன ஊர்வலத்தின் மீது கற்களை வீசுவதைக் காண முடிகிறது. கல் வீச்சில் காயம் பட்ட இந்துக்களின் அலறலும் ரத்த வெள்ளமும் பலரது இதயங்களைப் பிழிந்துவிட்டிருக்கிறது. பயமுறுத்தும் அலறல் சத்தங்கள் ஒரு காட்டுமிராண்டி கும்பலிடம் சிக்கிக் கொண்டதை வெளிப் படுத்தியுள்ளது. ஒருவர் லாரிக்குள் ஒளிந்து கொள்ள முயற்சிப்பதைப் பற்றியும், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும் முயற்சி செய்வதை அந்த வீடியோ வெளிப்படுத்தி யிருக்கிறது.

துர்கா பூஜா விசர்ஜன ஊர்வலம் ஒரு மசூதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானதாக உத்தர பிரதேசத்தின் பால்ராம்பூரைச் சேர்ந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார். மசூதிக்கு சற்று முன், ஒரு திருப்பம் உள்ளது. வழக்கமாக பலத்த இசை வாசிப்புடன் செல்லும் ஊர்வலம் மசூதி இருக்கும் பகுதி வழியாகவே செல்கிறது. இருப்பினும், துர்கா பூஜா ஊர்வலம் மசூதி வழியாகச் செல்லும் போது இசைப்பதை நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி முஸ்லிம்கள் கூறியிருந்தனர். ஆனால், அந்தப் பகுதியைக் கடந்து சென்ற போது, வாத்திய இசை நிறுத்தப்படவில்லை என்பதால் முஸ்லிம்கள் கோபம் அடைந்ததாகவும், அதனால் ஊர்வலத்தின் மீது கற்களை வீசத் தொடங்கியதாகவும் கூறுகின்றனர்.

ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கூடுதல் கண்காணிப்பாளர், விசர்ஜன ஊர்வலம் மீதான தாக்குதல் யதேச்சையாக நிகழ்ந்ததாகக் கருத இடமில்லை என்றும், ஊர்வலத்திற்காகக் காத்திருப்பது போல், முஸ்லிம் சமூகம் முன்னதாகவே கற்களைக் குவித்து வைத்து, தயார் நிலையில் இருந்திருப்பதாகவே கருத வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

துர்கா விசர்ஜன ஊர்வலத்தில் கற்கள் வீசப் பட்ட பின்னர் பால்ராம்பூரில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக, கூடுதல் எஸ்.பி. தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதன் பின்னர் இப்பகுதியில் பதற்றம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். காவல்துறையினரின் விரைவான நடவடிக்கைக்குப் பிறகு, துர்கா விசர்ஜன ஊர்வலம் அப்பகுதி இந்துக்களால் அமைதியான முறையில் கொண்டு செல்லப் பட்டு, நிறைவை அடைந்துள்ளது.

இது குறித்து பல்ராம்பூர் காவல்துறை ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

பால்ராம்பூர் போலீசாரின் செய்தி குறிப்பில்… 147, 148, 149, 153 அ, 295 அ, 336 மற்றும் 323 ஆகிய பிரிவுகளின் கீழ் பெயரிடப்பட்ட 24 பேர் மற்றும் பெயரிடப்படாத பல நபர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 8 பேரைத் தவிர, 4 குழுக்கள் மீதமுள்ள குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :