பாகிஸ்தானுக்கு எதிராக பேசிய பெண்! கடத்தி சித்திரவதை செய்த கொடூரம்!

Published:

pakistan

பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்துப் பேசிய பெண் வழக்கறிஞர் கடத்தி சித்திரவதை செய்யப்பட்டு மோசமான நிலையில் பஞ்சாப் மேல்சி பகுதியில் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்புப் படையினரை ‘எதிரி’ என்று கூறியதற்காக இவர் வேலைசெய்து கொண்டிருந்த அலுவலகத்திலிருந்து ஆகஸ்ட் 14 இல் அடையாளம் தெரியாத நபரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அரை மயக்கத்தில் கால் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் மேல்சி பகுதி தோடா சாலையில் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காவல்துறையினரிடம் வழக்கறிஞரின் நிலைமை குறித்துக் கேட்டறிந்த அஜாக்கியா என்பர் வெளியிட்ட வீடியோவில், அந்த பெண்மணி டிபால்பூரில் வசிப்பவர் மற்றும் அவர் நான்கு நபரால் கடத்திச்செல்லப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டதை உறுதிசெய்துள்ளார்

lawyer

டிபால்பூர் டென்சில் தலைமை மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பெண்மணி அளித்துள்ள வாக்குமூலம் மூலம் சிறப்புக் குழு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியுள்ளனர்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

பாகிஸ்தான் ராணுவம், மனித உரிமைகள் மீதும் அரசியல் அமைப்பு மீதும் தங்கள் ஒடுக்குமுறையைச் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானிலிருந்து தப்பிய சில ஆர்வலர்கள் அங்கு நடைபெறுகின்ற கொலை கடத்தல் உள்ளிட்ட செயல்களுக்குப் பாகிஸ்தான் ராணுவத்தையே குற்றம் சாட்டுகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அதனை ஆதரித்து அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதே போன்று பாஸ்டனை சேர்ந்த மன்சூர் பாஸ்ட்டின் என்பவர் ராணுவத்திற்கு எதிராகப் பேசியதால் கைது செய்யப்பட்டார். இதே போன்று பல சிந்துகள், பலோச்சை சேர்ந்த பலரும் பாகிஸ்தான் ராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்

Related articles

Recent articles

spot_img