இந்தியாவுக்கு ஆதரவு: தேசிக்கொடி வண்ணத்தில் ஒளிர்ந்த நயாக்ரா!

Published:

nayagara
nayagara

கொரோனா இரண்டாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகரா, இந்திய தேசிய கொடியின் வண்ணத்தில் ஒளிரூட்டப்பட்டு ஜொலித்தது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உக்கிரமாக உள்ளது. தினமும் பாதிப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி, உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவிக் கரம் நீட்டி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா, இந்திய மூவர்ண கொடி நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது. இந்தியாவுக்கு இவ்வாறாக யுஏஇ ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில், இந்திய மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிரூட்டி, கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவுக்கு, கனடா ஆதரவு அளித்திருக்கிறது.

அமெரிக்க – கனடா எல்லையில் அமைந்திருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி, உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ஆகும். இதில் கனடா பகுதியில் அமைந்திருக்கும் ஆண்டாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி இவ்வாறு ஒளிரூட்டப்பட்டிருக்கிறது. இதன் புகைப்படத்தினை நயாகரா நீர்வீழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் பகிர்ந்துள்ளது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img