இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்பு..?

உலகம் சற்றுமுன்

06 June09 Sri Langa - 2026இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுதங்களை கிளிநொச்சியில் ராணுத்தினர் மீட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் புலிகளின் ஆயுதங்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் அமைந்துள்ள கரைச்சி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் பயன்படுத்தாமல் இருந்த கட்டடத்தின் அருகே குழி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் மற்றும் ராணுவத்தினர் சோதனை செய்த போது, மோட்டார் செல்கள், கைக்குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள், கிளைமோர் கண்ணி வெடிகள் என பல்வேறு வகையான வெடிபொருட்கள் காணப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்து, அகற்றவது மற்றும் செயலிழக்க செய்வது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டனர். வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.