சுமத்ரா தீவு அருகே அடுத்தடுத்து நில நடுக்கம்!

உலகம் சற்றுமுன்
sumatra tremour - 2026

இந்தோனேசியாவில் உள்ள மென்ட்டாவாய் தீவுக்கு 117 கி.மீ தென்கிழக்கே கடல் படுகைக்கு அடியில் 17 கி.மீ ஆழத்தில் இன்று மாலை 3 மணி அளவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகவும், அதன் பின்னர் சுமார் 25 நிமிடங்களுக்கு பிறகு ஏற்பட்ட நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவாகவும் பதிவானது.

மென்ட்டாவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட கேபுலவான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகமாக உணரப்பட்ட இந்த நிலநடுக்கங்களால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதம் மற்றும் இழப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

மெண்ட்வாயில் 2010ல் ஏற்பட்ட சுனாமியில் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். படங்க் பகுதியில் 2009ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 1100 பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.