வேத மந்திரம் முழங்க தாலி கட்டி திருமணம் செய்துகொண்ட அமெரிக்க பெண் எம்.பி.,

gabbard-weddingஹவாய்: அமெரிக்காவில் இந்து வம்சாவளியைச் சேர்ந்த பெண் எம்.பி., துளசி கப்பார்டு (33), வேத மந்திரங்கள் முழங்க, தாலி கட்டிக் கொண்டு, ஹிந்து முறைப்படி, ஆபிரகாம் வில்லியம்ஸ் (26) என்ற திரைப்பட ஒளிப்பதிவாளரை மணந்து கொண்டார். ஹவாய் தீவில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், அமெரிக்க எம்.பி.,க்கள் மற்றும் இந்தியாவில் இருந்து சென்ற பா.ஜ., பொதுச்செயலர் ராம் மாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கரோல் – மைக் கப்பார்டு தம்பதியின் மகளான துளசி, ஜனநாயகக் கட்சியின் ஹவாய் தீவு எம்.பி.,யாக உள்ளார். இவரது தாய், அமெரிக்காவில், ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தில் இணைந்து இந்து மதத்தைத் தழுவியவர். அதனால் பிரம்ம மத்வ கௌடிய சம்பிரதாய முறையில் வளர்ந்த துளசி, ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். வேத மந்திரங்கள் முழங்க, துளசி கழுத்தில் வில்லியம்ஸ் தாலி கட்டினார். நிச்சயதார்த்தத்தின் போது, கிறிஸ்துவ முறைப்படி துளசியின் கை விரலில், வில்லியம்ஸ் வைர மோதிரம் அணிவித்தார். துளசிக்கு இது இரண்டாவது திருமணம். https://youtu.be/gPsqnQXLuu4