இலங்கையில் இன்று மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு!

Published:

church bomb - 2026

இலங்கையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.  இலங்கை தலைநகர் கொழும்புவில் சர்ச்சு அருகே நின்று கொண்டிருந்த வேனில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இருப்பினும் இந்த குண்டு வெடிக்காத நிலையில் கண்டறியப் பட்டு, செயலிழக்கச் செய்தபோது வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளில், கிறிஸ்துவர்கள், சர்ச்சுகளைக் குறிவைத்து இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்த்திய தற்கொலைப் படை குண்டுவெடிப்புகள், எட்டு இடங்களில் நடத்தப் பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் கொண்டுவரப் பட்டது.

இந்நிலையில் இன்று காலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப் பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சர்ச் ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்த வேனில் குண்டு கண்டறியப் பட்டு, செயலிழக்கச் செய்த போது வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல் வெளியானது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img