இந்துவாக வேடமிட்டு கோயில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுத்த இஸ்லாமியர்!

Published:

srilanka tablets muslim2 horz - 2026

இலங்கையில் உள்ள மூதூர், கிளிவெட்டியில் இஸ்லாமியராக இருந்தவர், இந்துவாக வேடமிட்டு, அம்மன் ஆலயத்தில் உதவி அர்ச்சகராக வேலைக்குச் சேர்ந்து கோயிலுக்கு வருபவர்களுக்கு பஞ்சாமிர்தத்தில் கருத்தை மாத்திரை கலந்து கொடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது. அவரது வீட்டில் இருந்து கருத்தடை மாத்திரைகள் கைப்பற்றப் பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

கடந்த வாரத்தில் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம் இதுதான். ஏற்கெனவே ஐஎஸ்., மற்றும் நேஷனல் தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு கொண்ட டாக்டர் ஒருவர், சிகிச்சைக்கு வரும் இந்து, பௌத்த பெண்கள் சுமார் 4ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அவர்கள் அறியாமலேயே கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளதாக வெளியான செய்திகளால் இலங்கையில் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், கோயில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுத்ததாக ஒருவர் கைதானது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ஊடகங்கள் பலவும் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. இலங்கை, மூதூர், கிளிவெட்டி ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு தாம் மாறிவிட்டதாகக் கூறிக் கொண்ட நபர் ஒருவர், ஆலயத்தின் பிரதான பூசாரிக்கு உதவியாக பூசாரி பணியை செய்து வந்திருக்கிறார்.

பிரதான பூசாரி கோயிலின் பூசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது, அவரது உதவியாளராக இருப்பவர், கோயிலுக்கான பஞ்சாமிர்தம் செய்வது, நைவேத்திய பிரசாதங்கள் செய்வது போன்ற வேலைகளைச் செய்து வந்துள்ளார். இவ்வாறு ஒரு வருடத்துக்கும் மேல் இவர் செய்து வந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

srilanka tablets muslim1 - 2026இந்நிலையில் இவர் மீது போலீஸில் குற்றம் சாட்டி புகார் அளிக்கப் பட்டுள்ளது. அதில், கோயில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளதாகக் கூறப் பட்டது. .இதை அடுத்து உளவுத் துறை போலீஸார் குறிப்பிட்ட நபர் குறித்தும், அவரது நடவடிக்கைகள் குறித்தும் கண்காணித்துள்ளனர்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

ஏற்கெனவே காத்தான்குடி பகுதி தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தினரால் கபளீகரம் செய்யப் பட்டு, இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களின் மையமாகப் போய் விட்டதால், அங்கும் கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நபர், காத்தான்குடிக்கு அடிக்கடி சென்று வருவதையும், அங்குள்ள பள்ளிவாசலுக்குச் சென்று வருவதையும் உளவுத் துறையினர் கண்டறிந்தனராம்.

இதை அடுத்து, அவர்களுக்கு சந்தேகம் ஏற்படவே கிளிவெட்டி ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் அவர் தங்கியிருந்த ஆலய மடப்பள்ளியில் கடந்த வாரம் சோதனை செய்துள்ளனர். அப்போது, அங்கிருந்து கருத்தடை மாத்திரைகள் சில அட்டைகள் கண்டெடுத்தனராம். அத்துடன், அவரது கைப்பையில் இருந்து குர்ஆன் புத்தகமும் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதை அடுத்து, இந்த நபர், திட்டமிட்டு இந்துவாக வேடம் இட்டுக் கொண்டு, ஆலய பணியில் சேர்ந்து, இந்து பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மேலும் விசாரணை செய்வதற்காக போலீஸார் அவரை கைது செய்து அழைத்து சென்றதாக இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இவர் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நபர் முன்னர் ஆசிரியர் பணியில் இருந்ததாகவும் பள்ளி மாணவி ஒருவரை பலாத்காரம் செய்ததாகவும், அது குறித்த வழக்கு தற்போதும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் கூறப் படுகிறது.

இந்நிலையில், இந்த நபரை பணிக்கு அமர்த்திய கோயிலின் ஆலய பரிபாலன சபை தலைவரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டது. அப்போது அவர், தமக்கும் அந்த நபருக்கும் தொடர்பில்லை என்றும், அவரை ஆலயத்தின் பிரதான பூசாரியே பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும், அவர்தாம் அந்த நபருக்கு சம்பளம் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதை அடுத்து ஆலய பிரதான பூசாரியையும் போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர்.

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

இந்நிலையில், இந்த நபர் செங்கலடி பதுளைவீதியில் தமிழ்ப் பெண் ஒருவரை இந்து முறைப்படி திருமணம் செய்து, தாமும் இந்துவாக மாறி வாழ்க்கை நடத்தி, சில நாட்களில் திருமணம் செய்த பெண்ணிடம் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டாராம். இந்நிலையில், அவரைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட, அந்த நபர் இந்த ஆலயத்தில் பணி செய்யும் தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது.

srilanka tablets2 - 2026இதற்கிடையே இவர் குறித்த வேறொரு தகவலும் வெளியாகியிருந்தது. பேஸ்புக்கில் இவர் குறித்த செய்தி வந்த போது, தாம் ஒரு தமிழரே என்றும், தாம் முஸ்லிம் அல்ல என்றும் அவர் மறுத்ததாகவும், தம் மீது பொறாமை கொண்டவர்கள் அவ்வாறு புகார் கூறியிருந்ததாகவும் இவர் தெரிவித்திருந்தார்.

மேலும் தாம் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆசிரியராகப் பணி செய்த போது, முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்ததாகவும், அதனாலேயே தம்மை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். என்றும் கருத்திட்டிருதார்.

இந்நிலையில்தான் இவர் குறித்த தகவல்களைத் திரட்டியுள்ளனர் போலீஸார். அதில், தமிழர் என தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு கோவில் பூசாரிக்கு உதவியாக இருந்ததாக அவர் குறித்த விவரங்கள் வெளியாயின.

இவர், தனது பெயரை சிவா என கூறியுள்ளார். இவரை மூதூர் போலீஸார் விசாரித்த போது, இவர் தமிழர் அல்லர் என்றும் முஸ்லிம் என்றும், போலியான பெயரில் ஆலயத்தில் பணிபுரிந்தது வந்ததும் தெரியவந்தது.

மேலும், புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வந்தனர். அப்போதுதான், இவர் ஏறாவூருக்கு தனது தாயாரின் வீட்டுக்குச் சென்று
அங்குள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்காகச் சென்றதும், அப்போது இவர் ஒரு முஸ்லிம் நபர் என்று உறுதி செய்யப் பட்டதாகவும் கூறப் படுகிறது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

இவரது பெயர் சிவா அல்ல, உண்மையான பெயர் புஹாரி மொஹம்மத் லாபீர் கான்; இவர் ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்டவர், மூன்று திருமணங்கள் செய்துள்ளார். முதல் மனைவி ஓட்டமாவடி மீராவோடைச் சேர்ந்த அபுல்ஹசன் சுபாஹனி என்றும், இரண்டாவது மனைவி மட்டக்களப்பு கரடியனாற்றைச் சேர்ந்த தமிழ்ப் பெண் நல்லதம்பி சாந்தி என்றும், முன்றாவது மனைவி கல்முனையைச் சேர்ந்த ஏஜேஎஃப் சப்னா என்றும் தெரியவந்துள்ளது.

இதை அடுத்து, இவர் மீது ஏற்கெனவே உள்ள வழக்குகளில் இவர் கைது செய்யப் பட்டு, விசாரிக்கப் பட்டு வருகிறார். இவரது செல்போனில் ஐ.எஸ்., அமைப்புடன் கூடிய தொடர்பு குறித்து தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே பிரியாணியில் இது போன்ற கருத்தடை மாத்திரைகள் மலட்டுத்தனம் ஏற்படுத்தும் மருந்துகளைக் கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள் என்று கடந்த வருடம் எழுந்த புகாரில்தான் கலவரம் வெடித்தது. தற்போது கோயில் பூசாரியாக வேடமிட்டு அதே போன்ற செயல் செய்வதாக எழுந்துள்ள புகாரால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், போலீஸார் பதட்டத்தை தணித்து, சமூக அமைதியைப் பேணும் வகையில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

படம், தகவல் உதவி: இலங்கைத் தமிழ் இணையதளங்கள்


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”5″ tax_term=”42″ order=”desc”]

Related articles

Recent articles

spot_img