சொகுசு கப்பலில் தீ விபத்து ! வால்கா நதிகரையில் பரபரப்பு !

உலகம் பொது தகவல்கள்

Russia ship0 fired - 2026ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் நீஜ்னி நோவ்கரத் என்ற நகருக்கு அருகே ஓடும் வால்கா நதிக்கரையில் இந்த சொகுசு கப்பல் நின்றுகொண்டிருந்தது. ‘ஹோலி ரஷ்யா’ என்றழைக்கப்படும் சொகுசு கப்பல் கடந்த 2015ம் ஆண்டு செயல்பாட்டில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இந்த கப்பலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அந்த இடமே சாம்பல் புகை மண்டலமாக காட்சியளித்து. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஹோஸ் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த தீயில் கப்பலின் பெரும்பாலான பகுதிகள் கருகி நாசமாயின. ஆளில்லாத கப்பல் என்பதால் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.