தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் அமைந்துள்ளது. மாவட்டத்துக்கு உட்பட்ட மேலவெள்ளூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சரளா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். இத்தம்பதியினருக்கு காவியா என்ற மகள் உள்ளார்.


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்கும் பணியில் கவனம் செலுத்துவதை அறிந்த மாணவி காவியா, கடந்த மாதம் ஆட்சியரிடம் சென்று ஊருணியை சீரமைக்க அனுமதி கேட்டார்.
அதனை ஏற்ற ஆட்சியர் திருப்புவனம் வட்டாட்சியர் ராஜாவை கள ஆய்வு செய்து அறிக்கை கேட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரத்திலிருந்து ஊருணியை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளனர். இதற்கான வரத்துக்கால்வாய்கள் சீரமைக்கும் பணியும் நடந்துவருகின்றன.
இதுகுறித்து திருப்புவனம் வட்டாட்சியர் ராஜா கூறுகையில்,”ஆட்சியர் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்து வருகின்றார். மேலும் பல நீர்நிலைகளை சீரமைக்க தன்னார்வலர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதனையறிந்த அமெரிக்க மாணவி காவியா ஆட்சியரிடம் அனுமதிகேட்டார். அவரது அனுமதியில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
வெளிநாட்டில் இருந்து வந்து சொந்த கிராமத்தில் மேல், இத்தனை அக்கறை காட்டும் சரவணன் குடும்பத்தினரை கிராமத்து மக்கள் போற்றி புகழ்ந்து வருகின்றனர்