ஆற்றை கிழித்துக் கொண்டு ஆம்பூலன்ஸ்க்கு வழிகாட்டிய அற்புத சிறுவன் !

Venkatesh - 2026கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. அந்த கிராமத்தில் குளம் எது? குளத்தைக் கடக்க உதவும் தரைப்பாலம் எது என்று தெரியாமல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது, 6 குழந்தைகளையும், ஒரு பெண்ணின் சடலத்தையும் தாங்கிக் கொண்டு அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்ஸுக்கு பாலம் எந்த திசையில் இருக்கிறது என்பதை  அறிய  உதவி தேவைப்பட்டது. அப்போது அங்கே இருந்த நீர்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன், உடனே ஆம்புலன்ஸுக்கு வழிகாட்டினான்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம், தன்னை தொடரும் படிக் கூறி மேம்பாலத்தில் ஓடும் வெள்ளத்தைக் கிழித்துக் கொண்டு ஓடி வந்தான் சிறுவன், அவனை பின்தொடர்ந்து ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் வெங்கடேஷ் பற்றிய புகழும் பரவியது.

தனது வீர தீரச் செயல் பற்றி வெங்கடேஷிடம் கேட்டபோது, அன்று நான் செய்தது வீரச் செயல் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு உதவி செய்ய விரும்பினேன் செய்தேன், அவ்வளவுதான் என்கிறார் ரொம்ப சாதாரணமாக.

அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்புப் படிக்கும் வெங்கடேஷ், சமூக வலைத்தளங்களால் தான் எவ்வளவு பெரிய புகழை அடைந்திருக்கோம் என்பது கூட தெரியாமல் அதே எளிய சிறுவனாகவே பேசுகிறார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கே ஆம்புலன்ஸ் வந்தது. அதன் ஓட்டுநர், இங்கே ஏதேனும் வழி இருக்கிறதா? வாகனம் செல்ல முடியுமா? என்று கேட்டார். இருக்கிறது என்று சொன்னபோது, அதற்கு வழிகாட்ட முடியுமா என்று கேட்டார். உடனே நான் வழிகாட்டினேன். இதில் உதவி, வீரச் செயல் செய்தேன் என்றெல்லாம் எனக்குப் புரியவில்லை என்கிறார் வெங்கடேஷ்.

வெங்கடேஷ் பெயரை வீர தீர விருதுக்கு பரிந்துரை செய்ய ராய்ச்சூர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories