ஆவணி கிருத்திகை! கரூரில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ அபிஷேகம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் திருச்சி
murugar - 2026

கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பாலசுப்ரமணிய சுவாமி முருகனுக்கு மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது

கரூர் நகரின் மையப்பகுதியில் தேர்வீதியில் அமைந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில், இன்று ஆவணி மாத கிருத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு பரிவார தெய்வங்களில் ஒன்றான பாலசுப்பிரமணிய சுவாமிக்கு விஷேச அபிஷேகங்கள் நடைபெற்றது.

பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு நடைபெற்ற விசேஷ அபிஷேகங்களை தொடர்ந்து, தீபாராதனையும், பின்னர் பல்வேறு ஆபரணங்கள் கொண்டும், பூக்கள் கொண்டும் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு நட்சத்திர ஆரத்தி, கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்திகளும், அதை தொடர்ந்து மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினரும், ஆலய ஸ்தானிக்கர் வசந்த் சர்மா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.