தீபாவளி சிறப்பு பஸ்கள் – இன்று முன்பதிவு தொடக்கம்

தமிழகம்

தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. எனவே தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் அக்டோபர் 25-ம் தேதி சென்றுவிடுவார்கள்.

தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. மேலும் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரெயில்களை இயக்கவும் தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. ஆனால் சிறப்பு ரெயில்களிலும் முன்பதிவு உடனே முடிந்து விடும் என்பதால் பெரும்பாலானோர் தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வார்கள்.

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை, திருப்பூர், சேலம், திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இந்த பஸ்கள் சொகுசு மற்றும் குளிர்சாதன பஸ்கள் ஆகும்.

அரசு விரைவு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகைக்காக அக்டோபர் 25-ந்தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு இன்று முன்பதிவு தொடங்குகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.