‘ஈ.வே.ரா மண்’ணாங்கட்டிகளின் சாதி வெறியில் தீய வைக்க…

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
evr statue - 2026

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சாதி வெறியுடன் அழைத்து வரும் திராவிட இயக்கத்தினரை தங்கள் டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர் பலர்.

மாமி, ஊறுகாய் மாமி என்றெல்லாம் சாதி வெறி கொப்புளிக்க சமூகத் தளத்தில் இயங்கி வருபவர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் அனைவருமே ஈவேரா மண் இது என்று கூறிக் கொண்டு, சாதியை ஒழிப்போம் என சவுண்டு விட்டு வருபவர்கள்தான் என்று விமர்சிக்கின்றனர் டிவிட்டர் பதிவுகளில்.

தான் பெரிய பொறுப்புகளில் இருந்தாலும், குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கி வீட்டு வேலைகளையும் செய்து வருபவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது இயல்பானதுதான்! அவர் தனது மாமியாருடன் அமர்ந்து ஊறுகாய் போட அவருக்கு உதவியாக இருந்த புகைப்படங்கள் முன்னர் வெளியாயின. அதனை கேலி செய்யும் விதமாக, நாள் முழுதும் டாஸ்மாக் சரக்கில் மிதந்து கொண்டு, மொடாக்குடியர்களாக தமிழகத்தினை ஆக்கி வைத்துள்ள குடிகாரர்களும் திராவிட இயக்கத்தினர்களும், நிர்மலா சீதாராமனை ஊறுகாய் மாமி என்று கேலி செய்து வருகின்றனர்.

சாதிவெறியுடன், பெண்கள் மீதான காழ்ப்பு உணர்வையும் வெளிப்படுத்தி வரும் திராவிட இயக்கத்தினரை தங்கள் டிவிட்டர் பதிவுகளில் ஒரு பிடி பிடிக்கின்றனர் பலர். அவற்றில் சில கருத்துகள்…

kishore k swamy@sansbarrierபெயருக்கு பின்னால் சாதிப்பெயரை வைக்காதே … இது ஈ வே ரா மண் …. ஆனால் நிர்மலா சீத்தாராமனை விமர்சிக்கும் பொழுது மட்டும் மாமி என்று குறிப்பிடு …. மற்ற பெண் அரசியல்வாதிகளை அவர்களது சாதியை குறிப்பிட்டு அழைக்க துப்புக்கெட்ட முற்போக்கு மண்ணாங்கட்டிகளின் புரட்சி இது தான்

  • ஆனால் அந்த ஈவேராவே தன்னை ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்றுதானே எழுதிவந்தார்.
  • ட்விட்டரில் புழங்க ஆரம்பித்தபின் நான் கண்டு கொண்ட உண்மை.. ஜாதி, மத வெறியர்கள் என்று தூற்றப்படும் பார்ப்பனரோ, சங்கிகளோ ஜாதியை இழுப்பதில்லை. “திராவிட, மதசார்பற்ற” ஆட்கள் ஜாதியை இழுத்து இழிவு படுத்துவதை ஒரு கலையாகவே வைத்திருக்கிறார்கள்.
  • ஈவே ராமசாமி காட்டிய வழி இதுவே.
  • நல்ல கேள்வி, ஆனால் பதில் வராது…
  • அடுத்த கேள்வியாவது பதில் கூறும் படி கேளுங்கள்…
https://twitter.com/Speakwithsense1/status/1167496286284599296

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.