தமிழிசை தமிழக ஆளுநர் ஆகியிருந்தால்…? திருமா பேச்சுக்கு பதிலடி!

உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி
thirumava - 2026

தமிழிசை தமிழகத்தின் ஆளுநராகியிருந்தால் அதிக மகிழ்ச்சி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதற்கு பதிலடிகள் கொடுத்து வருகிறார்கள் டிவிட்டர்வாசிகள்!

நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, தமிழக பாஜக., தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், தெலங்கானா மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப் பட்டார். இதை அடுத்து அவருக்கு வாழ்த்து கூறி பலரும் டிவிட்டர் பதிவுகளில் பதிவிட்டனர். சிலர் கருத்து தெரிவித்தனர்

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழிசை நியமனம் குறித்து வாழ்த்து தெரிவித்த போது, தமிழிசை தமிழகத்தின் ஆளுநர் ஆகியிருந்தால் அதிக மகிழ்ச்சி என்று கூறினார்.

இதை அடுத்து, அவரது கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ஒருவர் தனது சொந்த மாநிலத்திற்கு ஆளுநராக முடியாது என்கிற விதியை கூட தெரிந்து வைத்திடாத இவர் தான் தென்னகத்து அம்பேத்கர் … எம் எல் வேற படிச்சிருக்கார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.