December 6, 2025, 4:54 AM
24.9 C
Chennai

எங்களுடையது காதல் திருமணம்… எங்கள் குழந்தைகளுக்கு குலம், மதம் வேண்டாம்: நீதிமன்றத்தை நாடிய தம்பதி!

birth certificate
எங்களுடையது காதல் திருமணம்… எங்கள் குழந்தைகளுக்கு குலம், மதம் வேண்டாம்: நீதிமன்றத்தை நாடிய தம்பதி!

வேறு குலம் வேறு மதத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தம் குழந்தைகளுக்கு பர்த் சர்டிபிகேட் விண்ணப்பத்தில் மதம், குலம் என்ற காலங்களில் என்ன பூர்த்தி செய்வது? எதுவும் எழுதாமல் விட்டால் சர்டிபிகேட் தர மாட்டார்களா? ஐகோர்ட்டை நாடிய தம்பதிகள். சுவையான விவரங்கள்…

அவர்களிடம் வேறுவேறு குலங்களைச் சேர்ந்த சர்டிபிகேட்டுகள் உள்ளன. மதமும் வேறு வேறு. ஆனால் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்க்கை மகிழ்ச்சியாக நடந்து வருகிறது. இப்போது பையனுக்கு பர்த் சர்டிபிகேட் அப்ளை செய்தார்கள். ஆனால் அதிகாரிகள் அதனை பெண்டிங்கில் வைத்துவிட்டார்கள்.

காரணம் தெரிந்து கொள்வதற்காக சென்ற போது மதம் குலம் என்ற விவரங்களை பூர்த்தி செய்யவில்லை என்று கூறினார்கள். தாம் இருவரும் வேறுவேறு குலங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்கள். மகனுக்கு எந்த குலம் எந்த மதம் என்று எழுதுவது என்று தெரியவில்லை என்று கேள்வி கேட்டார்கள். ஏதோ ஒன்று எழுதி பூர்த்தி செய்யாவிட்டால் பர்த் சர்டிபிகேட் தர மாட்டோம் என்று அதிகாரிகள் நிச்சயமாக கூறிவிட்டார்கள். அவ்வாறு எழுதுவதற்கு விருப்பப்படாத அந்த தம்பதிகள் இறுதியாக ஹை கோர்ட்டை நாடினார்கள்.

ஹைதராபாத்தில் ஒரு தம்பதிகளின் போராட்டம் இவ்வாறு உள்ளது.

குலத்தைத் தாண்டி மதத்தை தாண்டி திருமணம் செய்து கொண்ட பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு பர்த் சர்டிபிக்கெட்டுக்காக குலம் மதம் என்ற காலத்தில் என்ன எழுதி பூர்த்தி செய்வது என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த டேவிட், ரூபா தம்பதிகள் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

தம் உரிமைகளுக்கும் மனோ பாவனைகளுக்கும் கௌரவம் அளித்து தம் மகனுக்கு பர்த் சர்டிபிகேட் முதல் மரண சர்டிபிகேட் வரை அரசாங்கம் அளிக்கும் எந்த ஒரு சர்டிபிகேட்டும் மதம்குலம் இல்லாதவர்கள் ( நோ ரிலிஜன், நோ கேஸ்ட்) என்று அடையாளம் அளிக்க வேண்டும் என்று அந்த வழக்கில் கோரி உள்ளார்கள்.

ஜஸ்டிஸ் ராகவேந்திரா சிங் சவுகான், ஜஸ்டிஸ் அபிஷேக் ரெட்டி அமர்ந்த நீதிமன்றம் இந்த பெடிஷன் மீது வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணையை நடத்தியது.

தம்பதிகளின் வேண்டுகோளின் மேல் கவுண்டர் பதிவு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஜனன மரண சர்டிபிகேட் தரும் அதிகாரிகளுக்கும் மாநில அரசாங்க காரியதரிசி, முநிசிபல் அட்மினிஸ்ட்ரேஷன் காரியதரிசி, கொத்தகோட்டை முனிசிபாலிட்டி அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். அடுத்த விசாரணைக்கு 4 வாரங்கள் கெடு விதித்துள்ளார்.

சென்ற வருடம் மார்ச் 23 ல் பிறந்த தன் மகன் இவான்ரூடே வின் பர்த் சர்டிபிகேட்காக கொத்தகோட்டை முனிசிபாலிட்டியில் விண்ணப்பம் செய்து கொண்டதாக தம்பதிகள் தெரிவித்தார்கள். பிறப்பு பதிவு விண்ணப்பத்தில் குடும்ப மதம் என்ற காலம் பூர்த்தி செய்தால் தவிர பிறப்புச் சான்றிதழ் தருவது நடக்காது என்று கூறி விட்டார்கள் என்றனர்.

மதத்தைத் தாண்டி குலத்தைத் தாண்டி திருமணம் செய்து கொண்ட தாம் எந்த மதத்தையும் எந்த குலத்தையும் நம்புவது இல்லை ஆதலால் விண்ணப்பத்தில் உள்ள குடும்ப மதம் என்ற காலத்தில் பூர்த்தி செய்வதற்கு நிராகரித்து விட்டோம் என்று கூறியுள்ளார்கள். அதிகாரிகள் அதனை நிராகரித்ததால் மாவட்ட கலெக்டரையும் அதற்கு மேலுள்ள அதிகாரிகளையும் நாடி உள்ளதாக இந்த தம்பதிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஓராண்டு காலம் கடந்தாலும் தாம் விரும்பிய வண்ணம் பிறப்புச் சான்றிதழ் தராததால் மாநில உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளதாக தம்பதிகள் கூறியுள்ளார்கள்.

நம் நாட்டில் மதங்களுக்கு அதீதமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் என்றும் இவற்றுக்கு எதிராக நீண்ட கால போராட்ட வரலாறு கூட இருக்கிறது என்றும் அவர்கள் நினைவு படுத்தினார்கள். மதத்தையும் குலத்தையும் நீக்கிவிட்டு வாழ்கிறேன் என்று யாராவது முன்வந்தால் தனிப்பட்ட நிலைமையில் ஏதோ ஒரு விதத்தில் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும் என்று தான் எங்களுக்கு பரிகாரம் காட்டுகிறார்களே தவிர சட்டப்படி செய்வதற்கு மட்டும் அரசாங்கம் பின்வாங்குகிறது என்று வருத்தம் தெரிவித்தார்கள்.

முன்பு ஒருமுறை தமிழ்நாட்டைச் சேர்ந்த அட்வகேட் ஸ்னேஹா இது போன்ற அனுபவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தனக்கு கிடைத்த சர்டிபிகேட்டில் நோ கேஸ்ட்- நோ ரிலிஜன் என்ற ஆப்ஷன் இருக்க வேண்டும் என்று அவர் முயற்சித்தாலும் அதிகாரிகள் அதனை மறுத்து விட்டார்கள். ஆனால் அவர் கலெக்டரை சந்தித்து தான் விரும்பிய வண்ணம் சர்டிபிகேட் வாங்கி விட்டார்.

ஆனால் ஆன்லைனில் அப்ளிகேஷன் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் மீண்டும் இதே பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி வருகிறது என்று ரூபா டேவிட் தம்பதிகள் கூறுகிறார்கள்.

ஹைகோர்ட்டில் இந்த அம்சத்தின் மீது இதுவரை ஒரு பில் தாக்கலாகி உள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த டிவி ராமகிருஷ்ணா ராவு, எஸ். க்ளாரன்ஸ் கிருபாளினி தம்பதிகள் கூட இதே டிமாண்ட் மீது நீதிமன்றத்தை நாடினார்கள். தம் பிள்ளைகளுக்கு அட்மிஷன் போது மதம் என்ற காலத்தைப் பூர்த்தி செய்தால் தவிர அட்மிஷன் தரமாட்டோம் என்று ஸ்கூல் நிர்வாகிகள் கூறியதால் அவர்கள் நீதிமன்றமத்தில் முறையிட்டனர். மதத்தை வெளிப்படுத்த மறுத்ததன் காரணமாக அட்மிஷன் கொடுக்காதது சரியல்ல என்று கோர்ட்டு கூறியதால் ஸ்கூல் அட்மிஷன் கொடுத்தது.

ஆன்லைனில் பூர்த்தி செய்யும் போது மதம் குலம் என்ற காலங்கள் தம்மைத் துரத்திக் கொண்டே வருகிறது. அதனால் நிரந்தரமாக தீர்வு காட்டும் விதமாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தை நம்பும் உரிமை எவ்வாறு உள்ளதோ அதேபோல் மதத்தை நம்பாமல் இருக்கும் உரிமையும் கூட அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். அதனால் எங்கள் உரிமைகளை அடையாளம் காணுங்கள் என்று ரூபா, டேவிட் தம்பதிகள் கூறுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories