- ரேஷன் கார்டுகள் இருந்து வங்கி அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கு போஸ்ட் ஆபீஸில் பணம்.
- 24 போஸ்ட் ஆபீஸ்களின் வழியே பணம் பட்டுவாடா.
- ஹைதராபாத் நகரத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் போஸ்ட் ஆபீஸில் இருந்து பணம் பெறுகின்றனர்.
லாக்டௌன் நேரத்தில் தினப்படி தேவைக்கு சாமான்கள் வாங்குவதற்காக அரசாங்கம் கொடுக்கும் 1,500 ரூபாய்க்காக ஏழை குடும்பங்கள் வரிசையில் நின்று பெற்றுச் செல்கின்றனர். உணவுக்கான ரேஷன் கார்டு இருந்தும் பேங்க் அக்கௌன்ட் இல்லாதவர்கள் வெயிலில் போஸ்ட் ஆபிஸ் எதிரில் பணத்திற்காக மணிக்கணக்காக கிலோ மீட்டர் தூரத்திற்கு கியூ வரிசையில் நிற்கிறார்கள். இரண்டு நாட்களாக பணத்திற்காக பல போஸ்ட் ஆபீஸ்கள் அருகிலும் இந்த காட்சியே தென்படுகிறது.
லாக்டௌன் பின்னணியில் உணவுக்கான ரேஷன் கார்டுகள் இருக்கும் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி அளித்த அரசாங்கம் தினசரி தேவைக்கான சாமான்கள் வாங்குவதற்காக அவர்களின் வங்கி கணக்கில் ஆயிரத்து 500 ரூபாய் பணம் போட்டு உள்ளது. ஆனால் வங்கியில் அக்கவுண்ட் இல்லாத சுமார் ஒன்றரை லட்சம் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான பணத்தை போஸ்ட் ஆபீஸ்களில் செலுத்தியுள்ளது அரசாங்கம்.
பேங்க் அக்கௌன்ட் இல்லாத ஏழைகளுக்கு ரேஷன் கார்டு நம்பரை ஆதாரமாகக் கொண்டு பணம் அளிக்க வேண்டும் என்று போஸ்டல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்காக போஸ்டல் துறை நகரத்திலுள்ள ஜெனரல் போஸ்ட் ஆபீசோடு கூட சுமார் 24 போஸ்ட் ஆபீஸ்களைத் தேர்ந்தெடுத்து பணம் அளித்து வரும் செயலை ஐந்து நாட்களுக்கு முன் ஆரம்பித்தது.
ஹைதராபாத் நகரதில் உள்ள ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் (ஜிபிஓ), ஜூப்ளி ஹில்ஸ், பலக்நாமா, பகதூர்புரா, சைதாபாத், காச்சிகுடா, யாகுத்புரா, ராமகிருஷ்ணாபூர், ஹிமாயத்நகர், லிங்கம்பல்லி, சிகந்திராபாத்… போன்ற போஸ்டாபீஸ்கள் மூலம் உணவுக்கான ரேஷன் கார்டு இருந்து பேங்க் அக்கௌன்ட் இல்லாதவர்களுக்காக ஆயிரத்து ஐநூறு ரூபாய் இந்த போஸ்ட் ஆபீஸ்களில் பெற முடியும்.
ஹைதராபாத் நகரத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட் ஆபீஸ் களுக்குச் சென்று உணவுக்கான ரேஷன் கார்டை காட்டினால் அல்லது ரேஷன் கார்டின் புது நம்பரை தெரியப்படுத்தினால் போஸ்டல் துறை பணியாளர் உடனே பயோமெட்ரிக் (விரல்முத்திரை) எடுத்துக்கொண்டு ஆயிரத்து 500 ரூபாய் அளிக்கிறார்.
இதுவரையிலேயே ரேஷன் கடைகளில் கூட இந்த சலுகையை பெறுபவர்களின் லிஸ்ட் இருப்பில் இருப்பதாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கங்குல கமலாகர் அறிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு நிபந்தனையின்படி கார்டில் உள்ள ஹெட் ஆஃப் தி ஃபேமிலி குடும்ப பெரியவரான பெண்கள் மட்டுமே பணத்தைப் பெறும் உரிமை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.