விஜய் மல்லையா, மெஹுல் சோக்சி உள்ளிட்ட மிகப்பெரும் தொழிலதிபர்களின் ரூ.68000 கோடி மதிப்புள்ள கடனை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்திருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இது குறித்து பல விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
விமர்சனம் செய்வதில் தவறில்லை. ஆனால் ஒன்றை விமர்சனம் செய்வதற்கு முன்பாக அதைப்பற்றி தெளிவாக என்னவென்று தெரிந்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும்.
Write off என்பது வராக்கடன். Waive off என்பது கடன் தள்ளுபடி. தற்போது செய்யப்பட்டிருப்பது Write Off தானே தவிர. Waive off அல்ல.
Write off க்கும் Waive off என்பதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும். நீண்ட நாட்களாக அதாவது 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கடன்கள் வராக் கடன்களாக கருதப்படும். கடன்களை நீண்ட ஆண்டுகளாக கடன் பட்டியலில் வைத்திருக்க முடியாது. அப்படி செய்தால் இருப்பு நிலை குறிப்பு என்று சொல்லப்படும் Balance Sheet ஐ Tally செல்வதில் பிரச்சனை ஏற்படும். எனவே அந்த கடன்களை வராக் கடன்கள் பட்டியலில் சேர்ப்பார்கள். அதாவது NPA (Non-Performing Assets).
இதைதான் Accounting நடைமுறையில் Write Off என்று அழைப்பார்கள். வராக் கடன் என்று சொல்வது வராத கடன்தானே தவிர, கடன் தள்ளுபடி அல்ல. விஜய் மல்லையாவின் கடன் தள்ளுபடி செய்யபப்ட்டிருந்தால் அவரின் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை நடுவண் அரசு எப்படி முடக்கி வைத்திருக்கும்?
விஜய் மல்லையா தர வேண்டிய கடன் தொகையை விட பன் மடங்கு மதிப்புள்ள அவரது சொத்துக்களை மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது. அதனால்தான் விஜய் மல்லையாவே தான் வாங்கிய கடன் தொகையக் செலுத்த முன் வந்தும், அதனை மத்திய அரசு ஏற்க மறுப்பதாக குற்றம்சாட்டியதோடு தான் செலுத்த வேண்டிய கடன் தொகையை வாங்கிக் கொண்டு மத்திய அரசு முடக்கி வைத்துள்ள தன் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மெஹூல் சோக்சி மற்றும் நிரவ் மோடிக்கும் இதே நிலைதான். அவர்களுக்கு சொந்தமான பல்லாயிரம் கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த அபார்மெண்ட், வைர நைகைகள், கை கடிகாரங்கள், கார்கள், வைரங்கள் போன்றவற்றை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. நீதிமன்ற வழக்குகள் முடிந்தவுடன் முடக்கி வைத்துள்ள அவர்களின் சொத்துக்களை ஏலம் விட்டு தனக்கு சேர வேண்டிய கடன் தொகையை ரிசர்வ் வங்கி எடுத்துக் கொள்ளும்.
எனவே இது வராக்கடன் பட்டியலில்தான் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. அதாவது இது Write off தானே தவிர Waive Off அல்ல. அக்கவுண்டிங் நடைமுறைகள் எல்லோருக்கும் தெரியாது. அவற்றை புரிந்து கொள்வது கடினம்தான். Accounting நடைமுறைகள் புரியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஆங்கில வார்த்தைக்கான பொருளையாவது புரிந்துகொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது பொருளாதார வல்லுனர்கள் கருத்து.