போதையில் நடுப்பாதையில் நடிகர் செய்த காரியம்! மக்கள் கொடுத்த தர்ம அடி!

அடடே... அப்படியா? சினி நியூஸ் சினிமா
vengatesh - 2026

நடிகர்கள் சர்ச்சையில் சிக்குவது வழக்கம் தான். ஆனால் பொது இடத்தில் இப்படி அசிங்கப்பட்டு, செம அடி வாங்கிய நடிகரைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படியொரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

கன்னடத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹுச்சா வெங்கட். இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் உள்ளிட்ட பல்வேறு முகங்கள் கொண்டவர். அதேசமயம் தனது இமேஜை தானே டேமேஜ் செய்து கொள்ளக் கூடியவர்.

இதற்கு முன்னால் நடிகை ஒருவரை காதலித்து, அவர் மறுத்துவிட்டார். இதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் நேற்றுஅதிகமான போதையில் இருந்துள்ளார், சாலையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது, குடகு அருகே நபோக்லு பகுதியில் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது சாலையோரம் நின்றிருந்த கார் அருகே சென்றார். அங்கு போஸ் கொடுத்து விட்டு, திடீரென கார் கதவை திறந்துள்ளார். உடனே வேகமாக மூடியுள்ளார்.

vengatesh 1 - 2026

இதையடுத்து கீழே கிடந்த கல்லை எடுத்து, கார் மீது எறிந்தார். அதில் கார் கண்ணாடி தூள், தூளாக நொறுங்கியது. இதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அவரது செயலை தடுக்க முயன்றனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதற்குள் அங்கு வந்த கார் உரிமையாளர், தனது கார் சேதப்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அடாவடியாக பதில் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் ஹுச்சாவை பிடித்து அடிக்கத் தொடங்கினர்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் கன்னட நடிகர் ஹுச்சா வெங்கட் அடி வாங்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.