ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் பரவலாக மழை!

Published:

madurai-rain
madurai-rain

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது .

பின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மம்சாபுரம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன்கோயில், மல்லி, கூமாப்பட்டி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.

சுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேலாக பெய்த கன மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

காலை 7 மணி முதல் மழை பெய்து வருவதால் வாகங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img