நண்பன் மீது கொண்ட கோபம்! நண்பனின் 3 வயது மகளுக்கு செய்த தீங்கு!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
3yrs old - 2026

நண்பன் மேல் உள்ள கோபத்தில் அவரது 3 வயது குழந்தையை 7வது மாடியில் இருந்து தூக்கிவீசிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 3வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

தெற்கு மும்பையின் கோலபா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3 வயது குழந்தை தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் குழந்தையின் அப்பாவினுடைய நண்பன் அந்த குழந்தை 7வது மாடியில் இருந்து தூக்கி தரையில் வீசினார். இந்த கொடூர சம்பவத்தில் 3 வயது சிறுமி பரிதாபமாக அவ்விடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் நடந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக புகாரை பதிவு செய்த காவல்துறை சிறுமியை கொன்ற அவரது தந்தையின் நண்பர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து என்ன காரணத்திற்காக இவ்வளவு கொடூர செயலை செய்தார் என்பது குறித்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

7வது மாடியில் இருந்து குழந்தை தூக்கிவீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.