பரூக் அப்துல்லா மீது வைகோ.,வின் கனிவுப் பார்வை! ஆட்கொணர்வு மனு தாக்கல்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
vaiko farooq abdullah - 2026

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி மதிமுக தலைவர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. அவருக்கு மதிமுக சார்பில் செப்.15இல் நடைபெறும் மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும். அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லாவுக்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

மதிமுக., சார்பில், செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாதுரை யின் 111ஆவது பிறந்த நாள் விழா மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளாராம். காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலும், தொடர்ந்து பயங்கரவாத தாக்குதலும் திட்டமிடப் பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிற்காக ஆட்கொணர்வு மனுவை, வைகோ தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதனிடையே இந்த ஆட்கொணர்வு மனு விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரிதாக எதிரொலித்தது. வைகோ குறித்து விமர்சனங்கள் முன்வைப்பவர்கள் இதனையும் சேர்த்து விமர்சித்தனர். அவற்றில் ஒரு விமர்சனம்….

பருக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரும்படி உச்சநீதிமன்றத்தில் வைகோ மனு… செய்தி.
உன்னை பார்த்திட கூடாதுன்னு தான் அந்த மனுஷனே தலைமறைவா இருக்காப்ல, அவர் கதையையும் முடிக்காமல் விடமாட்ட போல

https://twitter.com/Johnravi_135/status/1171698756301008896

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.