தந்தை,சித்தியுடன் இணைந்தார் வரலட்சுமி!

சினி நியூஸ் சினிமா
piranthal parasakthi - 2026

வரலட்சுமியுடன் சரத்குமார் மற்றும் ராதிகா இணைந்து நடிக்கும் படத்திற்கு பிறந்தாள் பராசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சரத்குமார், ராதிகா மற்றும் வரலட்சுமி ஆகியோர் முதல் முறையாக இணைந்துள்ள படம் தான் பிறந்தாள் பராசக்தி. முழுக்க முழுக்க கிராமத்துக்கு படமான இதனை ராதிகாவின் ரேடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

கிடா சண்டையை மையப்படுத்தி எடுக்கப்படம் இப்படத்தை ஓம் விஜய் என்பவர் இயக்குகிறார். பிறந்தாள் பராசக்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தின் டைட்டில் ரோலில் வரலட்சுமி நடிக்கிறார்.

படத்திற்கான டீஸர் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்த தகவல்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனக்கு இது முற்றிலும் புதிய அனுபவம் மட்டுமல்ல, மிக சந்தோஷமான நினைவுகளைத் தரக்கூடிய படமாகவும் இத்திரைப்படம் அமைந்திருப்பதாக வரலட்சுமி ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.