வலிமை: நாளையே பிப்.24 ஆக இருக்காதா..? ரசிகர்களை ஏங்க வைக்கும் காட்சிகள்..!

Published:

ajith5 - 2026

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில், அஜித் இரண்டாவது முறையாக நடிக்கும் திரைப்படம் ‘வலிமை’

நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால், இவரது இரண்டாவது படமான இந்த படத்தின் மீதும் ஏகோபித்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர், சிங்கிள், ட்ரைலர், ரிலீஸ் தேதி ஆகிய தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த படத்தின் glimpse வீடியோ வெளியானது.

இதற்காக அஜித் ரசிகர்கள் வழி மீது விழி வைத்து காத்திருந்த நிலையில், சுமார் பொறி பறக்க, அஜித் பைக்கில் தாறுமாறாக ஸ்டண்ட் காட்சியில் அசத்தும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

ஹாலிவுட் படத்திற்கு இணையான ஆக்சன் காட்சிகள், மற்றும் தரமான வசனங்கள் இடம்பெற்றுள்ளது எடுத்ததுமே… ‘நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள், சாத்தானின் அடிமைகள் நாங்கள், இருள் வலைதான் எங்கள் உலகு, அதில் அத்துமீறி எவனாவது கால் வைத்தால்? என்ற வசனம் வேறு லெவலுக்கு உள்ளது.

அஜித் மிகவும் ஸ்டைலிஷாக நான் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி என கூறுவது… சும்மா தெறிக்க விடுகிறது.

valimai 3 - 2026

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். ஸ்டைலிஷ் வில்லனாக கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வலிமை படத்திலிருந்து வெளியான Glimpse 1 மில்லியன் லைக்குகளை கடந்து பெற்றுள்ளதாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிப்ரவரி 24 -ம் தேதி வெளியாகவுள்ள வலிமை படத்திலிருந்து மாஸ் காட்சிகளை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்..அதில் நாயகன் அஜித் தெறி சண்டை..மற்றும் நாயகியின் பைட் சீன்ஸ் இடம்பெற்றுள்ளது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img