
.சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “
சென்னையின் காலை உணவான இட்லி, தோசை, வடை உற்சாகம் தரக்கூடியது என்றும் தமிழர்களின் விரும்தோம்பல் சிறந்தது எனவும் தெரிவித்தார்.
சிறந்த பாரம்பரியம், கலாச்சாரம் கொண்டது தமிழ்நாடு. கற்சிற்பங்கள் நிறைந்த மாமல்லபுரம் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது.
ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்க உதவும். முடிவுகளை பற்றி கவலைப்படாமல் சவாலை எதிர்கொள்ள தயங்காதவர்களே வெற்றியாளர்கள். தொழில் முன்னேற்றத்தில் சிங்கப்பூர் அரசுடன் இந்தியா இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது “என தெரிவித்தார்.
சவாலான பிரச்சினைகளை தீர்க்க நீங்கள் கடந்த 36 மணி நேரம் பணியாற்றி வருகிறீர்கள். உங்களுக்கும் உங்கள் ஆற்றலுக்கும் வணக்கம் நான் உங்களிடம் சோர்வைக் காணவில்லை. ஒரு பணியில் ஏற்படும் திருப்தியை நான் சிறப்பாகக் காண்கிறேன்.
இளைஞர்களுக்கு ஹாக்தான்கள் மிகச் சிறந்தவை, பங்கேற்பாளர்கள் உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நவீன தொழில்நுட்பத்தை அணுகலாம். இன்றைய ஹேக்கத்தானில் காணப்படும் தீர்வுகள் நாளைய தொடக்க யோசனைகள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஹேக்கத்தான் மூலம் ஒரு புதிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த கேமரா மூலம் இந்த நிகழ்ச்சியில் யார், யார் பேச்சை கவனிக்கவில்லை என்பதை கண்டுபிடிக்க முடியும். இந்த கேமராவை சட்ட சபையில் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பிரதமர் நகைச்சுவையாக பேசியதை கேட்டு, அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.
#WATCH "My young friends here solved many problems today. I specially like the solution about camera to detect who is paying attention. I will talk to my Speaker in the Parliament. I am sure it will be very useful to Parliament", says PM at Singapore-India Hackathon at IIT-Madras pic.twitter.com/mheXdLaPGo
— ANI (@ANI) September 30, 2019