நீட்டுக்கு எதிராக தமிழக அரசியல்வாதிகள் மட்டும் கொடி பிடிப்பது ஏன்?

உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்
NEET - 2026

ஓ இதற்குத்தான் நீட் தேர்வை எதிர்த்தீர்களா? உதித்சூர்யா மூலம் சிக்கிய… #உண்மை

தமிழக ஊடகங்கள் முழுவதும் கடந்த ஒருவாரமாக ‘உதித்சூர்யா உதித்சூர்யா’ என்ற ஒற்றை பெயரையும், அவரது தந்தை பெயரையும் சொல்லி கொண்டு இருக்கின்றன.

ஆனால், இவற்றின் பின்னணியில் என்ன லாபம், நஷ்டம் என்பதை எந்த தமிழக ஊடகங்களும் சொல்ல முன்வரவில்லை._

மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை அமலுக்கு கொண்டுவந்தது. நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீட் நுழைவு தேர்வு தமிழகத்தில் மட்டும் கடுமையாக எதிர்க்கப்பட்டது.

இதிலும் காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்களில் நீட் தேர்வை அனுமதித்து விட்டு தமிழகத்தில் காங்கிரஸ் போராடியது.

பக்கத்து மாநிலமான கேரளாவில் நீட் தேர்வை செயல்படுத்திய கம்யூனிஸ்ட்கள் தமிழகத்தில் உயிரை கொடுப்போம் என்று போராடினர்.

அப்போதே இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் மக்கள் மற்றும் மாணவர்கள் நீட் தேர்விற்கு எதிராக திசை திருப்பப்பட்டதும் அனிதாவின் மரணமும், மத்திய அரசை எதிர்த்து வந்த தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மாறின.

நீட் தேர்வை எதிர்த்த அனைவருக்கும் வணக்கம், இன்று தமிழக ஊடகங்கள் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக பிரேக்கிங் நியூஸ் போட்டு ஒளிபரப்பி கொண்டு இருக்கின்றன.

சரி; அவர்கள் ஏன் ஆள்மாறாட்டம் செய்தனர். யாராவது யோசித்தீர்களா? ஆள்மாறாட்டம் செய்த யாருமே வசதி குறைவானவர்கள் அல்ல, ஆள்மாறாட்டம் செய்ததற்கே சுமார் 2 கோடி வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில் இவர்கள் ஏழைகளாக இருக்க முடியாது. பின்பு ஏன் இவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை? ஏன் குற்றச் செயல்களில் ஈடுபட்டு முறைகேடாக மருத்துவம் படிப்பதற்கான சீட்டினை பெற்றார்கள் யோசித்தீர்களா?

அதற்கு காரணம் நீட் தேர்வுதான்! நீட் தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும். நீங்கள் பணக்காரரா? இல்லை கோடீஸ்வராக இருந்தாலும் சரி. இதனால்தான் நீட் தேர்வில் தோல்வி அடைந்த உதித்சூர்யாவை அவரது தந்தை பலகோடி செலவு செய்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத ஏற்பாடு செய்தார்.

இதுவே நீட் தேர்வு இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் உதித்சூர்யா சில கோடி பணத்தை தனியார் மருத்துவ கல்லூரி முதலாலியிடம் கொடுத்து மருத்துவம் படித்துக்கொண்டிருப்பார்._

மொத்தத்தில் நீட் தேர்வு கொண்டுவந்ததால் தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு பல ஆயிரம் கோடிகளை சுருட்டிவந்த மருத்துவ கல்லூரிகளின் முதலாளிகள் பணத்தை கொள்ளை அடிக்க முடியாமல் போனது.

அரசியல்வாதிகள், பணக்காரர்கள் குழந்தைகள் நீட் தேர்வில் வெற்றி பெறமுடியாததால் மருத்துவம் படிக்க முடியவில்லை.

இதனை எதிர்த்துதான் தமிழக அரசியல்வாதிகள் போராடினார்களே தவிர, ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் கிடைக்காமல் போய்விட்டதே என்று இல்லை.

இப்போ தெரிகிறதா ஏன் இந்த திராவிட அரசியவாதிகள் நீட் தேர்வை எதிர்த்து போராடினார்கள் என்று?

  • யாரோ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.