மேகதாது அணை திட்டம் குறித்து பேச தமிழக முதலமைச்சர் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ள கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவகுமார், இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், கர்நாடக மக்களுக்கு மேகதாது அணை எந்த அளவுக்கு தேவை என்பதை தமிழகத்திற்கு விளக்க விருப்பம் கொண்டுள்ளதாகவும், மேகதாது விவகாரத்தை சுமுகமாக பேசித் தீர்க்க கர்நாடக அரசு விரும்புகிறது. காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கர்நாடக அரசும், மக்களும் விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் கடலில் கலக்கும் மேட்டூர் அணை உபரிநீரை தடுக்கலாம் என்பதை மறுத்துள்ளது. மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.