செம்மரம் வெட்டச் சென்ற 13 தமிழர்கள்… ஆந்திராவில் கைது!

திருப்பதி:திருப்பதி அருகே ஐத்தேபள்ளி வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக வனப் பகுதிக்குள் நுழைய முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் கைது. அவர்கள் வந்த வாகனம் உணவு பொருட்கள் பறிமுதல்.

திருப்பதி அருகே உள்ள ஐத்தேப்பள்ளி வனப்பகுதியில் நடக்கும் இன்று காலை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கார் ஒன்றில் அங்கு வந்த தமிழ் நாட்டை சேர்ந்த சிலர் உணவு பொருட்கள், மளிகை சாமான்கள், மரம் வெட்டுவதற்கான ஆயுதங்கள் ஆகியவற்றுடன் வன பகுதிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 13 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த உணவு பொருட்கள், மளிகை சாமான்கள், மரம் வெட்டுவதற்கான ஆயுதங்கள ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்து விசாரனை நடத்துகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.