மேகதாது விவகாரம்… தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்! பேசித் தீர்க்கலாம் வாங்க என்கிறார்!

Published:

04 July10 Cauvery River basin - 2026

மேகதாது அணை திட்டம் குறித்து பேச தமிழக முதலமைச்சர் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ள கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவகுமார், இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், கர்நாடக மக்களுக்கு மேகதாது அணை எந்த அளவுக்கு தேவை என்பதை தமிழகத்திற்கு விளக்க விருப்பம் கொண்டுள்ளதாகவும்,  மேகதாது விவகாரத்தை சுமுகமாக பேசித் தீர்க்க கர்நாடக அரசு விரும்புகிறது. காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கர்நாடக அரசும், மக்களும் விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.

letter to cm by karnataka minister on megadatu - 2026

இதனிடையே இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு,  மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் கடலில் கலக்கும் மேட்டூர் அணை உபரிநீரை தடுக்கலாம் என்பதை மறுத்துள்ளது. மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img