புயலால் பாதிப்படைந்த 10 பேருக்கு இலவசமாக வீடு வழங்கிய ரஜினி..!

Published:

தமிழகத்தில் கஜா புயல் தாக்கியபோது டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமானோர் பாதிக்கப் பட்டனர். பலர் வீடுகளை இழந்தனர். இந்த நிலையில், பலர் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்.

இந்தப் புயலில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் நோக்கி, ரஜினி மக்கள் மன்றத்தினரும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர். அப்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து 6 லாரிகளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

rajinikanth house kaja cyclone1 - 2026

அப்போது, ரஜினி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி தற்போது நாகை மாவட்டத்தில் கோடியக்கரை, தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் வீடுகளை இழந்த 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலவசமாக வீடு கட்டப்பட்டுள்ளது.

rajinimakkalmandram - 2026

புயலால் வீடிழந்து பாதிக்கப்பட்டவர்களை ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு நேரில் வரவழைத்து அவர்களுக்காகக் கட்டப் பட்ட வீடுகளின் சாவிகளை வழங்கினார்.

ALSO READ:  திருக்கோயில்கள்-81 நூல் வெளியீடு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img