டிவிட்டரில் கடந்த இரு தினங்களாக #சிகரெட்_கொளுத்தி_விஜய் என்ற ஹாஷ் டாக்கை டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
நடிகர் விஜய் தன் புதுப்படமான சர்க்காரில் சிகரெட் பிடிப்பது போல் போஸ்டர் போட்டாலும் போட்டார், அதற்கு பலத்த எதிர்ப்பு அரசியல் மட்டத்திலும் அரசு சமூக மட்டத்திலும் கிளம்பியது. பாமக., நிறுவுனர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவிக்க, அரசுத் தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்க, வேறு வழியின்றி தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தை மாற்றினார் விஜய். அது போல், படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ப்ரொபைல் படத்தை மாற்றியது.
இந்நிலையில் விஜய்க்கு எதிராக #தொடைநடுங்கிவிஜய் என்று டிவிட்டர் ட்ரெண்ட் ஆக்கிய நெட்டிசன்கள், இப்போது சிகரெட் கொளுத்தி விஜய் என்று கொளுத்திப் போட்டு ஞாயிறு பொழுதை நயமாகப் போக்கி வருகின்றனர்.
#சிகரெட்_கொளுத்தி_விஜய் pic.twitter.com/2yET6Ljef2
— இரா.அற்புதராஜா (@ArputharajaR1) July 8, 2018
Different Between
Thala & Visay ?? pic.twitter.com/GgiZGGft2A— Mohan_Thala_Addict (@mohan_addict) July 7, 2018




