
விஜய் ரசிகர் ஒருவர் தியேட்டர் ஸ்கீரின் கிழிந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது என்று ட்விட் செய்துள்ளார். அதற்கு தனியார் தியேட்டர் நிர்வாகம் ஒன்று அதிரடியாக பதில் அளித்துள்ளது.
இயக்குனர் அட்லி இயக்கிய பிகில் படம் இந்த தீபாவளிக்கு வெளியாக உள்ளது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
சென்னை சாய்ராம் கல்லூரியில் உள்ள லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடந்தது. நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜயின் அரசியல் பேச்சு நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது தற்போது விஜய் ரசிகர் ஒருவர் இதே போல் டிவிட் ஒன்றை செய்து பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். அதில், பிகில் வெளியாகும் போது முதல் நாள் கூட்டம் அதிகமாக இருக்கும். நிறைய பேர் வருவார்கள். அதனால் தியேட்டர் ஸ்கீரின் கிழிந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதுவும் நேரடியாக தியேட்டர் முதலாளியைப் பார்த்து இப்படி சொல்வது சரியானது கிடையாது. ஸ்கீரின் கிழிந்தால் எப்படி நீங்கள் பொறுப்பு கிடையாதோ, அதேபோல் உங்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கும் நாங்கள் பொறுப்பு கிடையாது, கவனமாக இருங்கள் என்று டிவிட் செய்துள்ளார்.
பிரபல ராம் முத்துராம் தியேட்டரை குறிவைத்து அவர் இந்த டிவிட்டை செய்து இருந்தார். இதற்கு வேகமாக பதில் அளித்த தியேட்டர் நிர்வாகம், நீங்கள் எல்லோரும் சந்தோசமாக கொண்டாட வேண்டும் என்றுதான் நாங்களும் நினைக்கிறோம். ஆனால் காமெடிக்கு கூட தியேட்டர் ஸ்கீரினை கிழிப்போம் என்று கூற வேண்டாம்.

அதோடு அந்த தியேட்டர் நிர்வாகம், தங்கள் பவுன்சர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். ஜிம் பாடியில் கலக்கலாக இருக்கும் 10+ ஆட்களின் புகைப்படங்களை வெளியிட்டு அந்த ரசிகரை மிரட்டி உள்ளனர். இதையடுத்து அந்த வீர தீர விஜய் ரசிகர் தனது டிவிட்டை டெலிட் செய்திருக்கிறார்.
See brother we want you all to celebrate but even for joke words like this straight to an theatre owner is not good.
— Ram Muthuram Cinemas (@RamCinemas) September 30, 2019
As you say you're not responsible, I say the same, we're not responsible as well.
Be careful when celebrating kiddo pic.twitter.com/Vp7JZ00FW5