
இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு பிரிட்டன் நாட்டின் விருது கிடைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இந்த சந்தோஷத்தை சமூகவலைததளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இன்று லண்டனில் நடைபெற்ற பிரிட்டன் நாட்டின் 4வது தேசிய திரைப்பட விழாவில், ‘மெர்சல்’திரைப்படத்துக்கு சிறந்த வெளிநாட்டு படம் என்ற விருதை வழங்குவதாக விழாக்குழுவினர் அறிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியானதும் அரங்கமே அதிரும் வகையில் கைதட்டல் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியான இந்த படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது



