124 வயது..! 3 நூற்றாண்டுகளைக் கடந்த ‘சாது’; அபுதாபி அதிகாரிகள் ஆச்சரியம்!

உரத்த சிந்தனை உலகம் லைஃப் ஸ்டைல்
Swami Sivananda oldest man - 2026

124 வயது சுவாமிகள் அபுதாபி விமான நிலையத்தில் …. உலகிலேயே அதிக வயதானவர் விமானத்தில் பறந்து வந்துள்ளது பற்றிய செய்தி அரபு உலகின் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இன்று பேசப்படுகிறது ..

இவர் 08.08.1896 வாரணாசியில் பிறந்து தனது சிறு வயதில் தாய் தந்தையரை இழந்து பின்னர் ஒரு குருவுடன் தங்கி சந்நியாசி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ..

தினமும் பல மணிநேரம் யோக மற்றும் தியானமும் செய்கிறார் … இன்று மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல மக்களை சந்தித்தவர் இவர் ஒருவரே !!!

பிரம்மச்சரியமும் , உணவு கட்டுப்பாடுமே தன்னை இப்படி வாழவைப்பதாக சொல்லுகிறார் .. மேலும் இவர் ஒரு தரை விரிப்பும் தலை அணையாக ஒரு மரத்தில் செய்த மணப்பலகையை பயன்படுத்துவதாக சொல்லுகிறார் ..

பொருள்கள் நிறைய இல்லாத காலத்தில் நிறைவாக மக்கள் இருந்தார்கள் .. இன்று நிறைய பொருள்கள் மக்களை வியாதிக்காரர்களாகவும் , நிம்மதி இல்லாதாக நேர்மை இல்லாமலும் இருக்கிறார்கள் என்கிறார்

source: https://gulfnews.com/uae/swami-sivananda-the-old-monk-who-caused-a-stir-in-abu-dhabi-airport-abstains-from-spice-and-sex-1.1570453028907

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.