October 9, 2024, 9:36 PM
29.3 C
Chennai

வந்துவிட்டது பறக்கும் கார்! விரைவில் விற்பனைக்கு!

ஹாலிவுட் ஃபேண்டஸி மற்றும் சயின்ஸ் ஃபிக்ஸன் படங்கள்ல நாம பறக்கும் கார்களை பார்த்திருப்போம். ஏன் பெருநகரங்கள் இருக்கக்கூடிய டிராஃபிக் நெரிசலில் நின்று ” இப்போ நம்மகிட்ட ஒரு பறக்கும் கார் இருந்தா எவ்வளோ நல்லாருக்கும் ” என பல தருணங்கள்ல நினைத்திருக்கலாம்.

ஆனா கற்பனையாக மட்டுமே இருந்து வந்த பறக்கும் கார்கள் தற்போது பயன்பாட்டிற்கு வர இருக்கு. கிளைன்விஸன் (kleinvision) அப்படிங்குற ஸ்லோவோக்யா நிறுவனம் இந்த பறக்கும் கார்களை கண்டுபிடிச்சு அசத்தியிருக்காங்க.

இந்த மாத தொடக்கத்துல இதுக்கான சோதனை ஓட்டம் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி முடிச்சிருக்காங்க கெலின்விஸன். சோதனை ஓட்டத்தின் போது முதலில் சாதாரண காராக சாலையில் ஓடியிருக்கிறது இந்த பறக்கும் கார்.

சாலையில் 2 நிமிடம் 15 நொடிகள் பயணித்த பிறகு தனது இறக்கைகளை விரித்து வானத்தில் பறக்க தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட 35 நிமிடங்களுக்கு 190 கிமீ வேகத்தில் ஆகாயத்தில் பறந்து பின்ன தரையிரங்கி சாதனை படைத்துள்ளது. தரையிறங்கிய பிறகு மீண்டும் சாதாரண காராக மாறிவிடுகிறது.

இரண்டு பேர் மட்டும் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரின் சோதனை ஓட்டம் ஸ்லோவோகியா நாட்டில் உள்ள நிட்ரா மற்றும் பிராடிஸ்லவா (Bratislava) விமான நிலையங்களுக்கு இடையே நடைப்பெற்றுள்ளது.

கெலின்விஸன் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீபன் க்ளைன் (Stefan Klein) இந்த காரை இயக்கியுள்ளார். மில்லியன் யூரோ பட்ஜெட்டில் உருவான இந்த கார் ஒரு தொழில்நுட்ப புரட்சியாக பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர உள்ள இந்த பறக்கும் காரை வாங்குவதில் அமெரிக்கர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் இதனை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு விதங்களில் இந்த கார் சந்தைப்படுத்தப்பட உள்ளது. ஒன்று ஏர் கார் புரோட்டோடைப் 1 மற்றும் ஏர் கார் புரோட்டோ டைப் 2. இதில் முதல் வகை காரில் 160HP BMW என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் அதிகபட்ச வேகம் 190km/h ஆக இருக்கும். இரண்டாவது வகையில் 300HP என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் of 300km/h ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகை பறக்கும் கார்களை இயக்க 300 மீட்டர் நீளம் கொண்ட ஓடுதளம் இருக்க வேண்டியது அவசியமாகிறது. தரை வழி மற்றும் வான் வழி என இரட்டை போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கார் இன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கிளைன்விஸன் (kleinvision) நிறுவனம் தவிர மேலும் பல நிறுவனங்களும் பறக்கும் கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பவன் கல்யாண் என்ற தளபதி!

மிஷனரிகள் விஷ தீஷ்ணயம் தாண்டி தடைகளை உடைத்து திமிரி வரும் பவன் கல்யாண் போல்வாரை வாரி அணைத்து பாதுகாப்பது நமது கடமை

ஹரியானா- ஹாட்ரிக் வெற்றி பெற்ற பாஜக.,! காஷ்மீரில் உமர் அப்துல்லா ஆட்சியமைக்கிறார்!

புள்ளி விவரங்களைப் பார்க்கையில் ஜம்மு - காஷ்மீர் தேர்தல் காங்கிரசின் தோல்வியாகவே கருதப்படுகிறது. குறிப்பாக பகுதி வாரியாக ஜம்முவின் அனைத்து தொகுதிகளையும் குறி வைத்த பாஜக.,வின் திட்டத்திற்கு பெருமளவு பலன் கிடைத்துள்ளது

பஞ்சாங்கம் – அக்.09 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

‘நிமுசுலைடு’ மாத்திரைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க தடை!

நிமுசுலைடு (Nimesulide) என்ற மாத்திரை, கால் வலி, மூட்டு வலி, காது, மூக்கு, தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு தீர்வை அளித்து வருகிறது.

Topics

இந்திய விமானப் படை தினம் இன்று!

அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் வானில் பறக்கும் போர் விமானங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும். அல்லது இந்தியாவில் தயாரான உதிரி பாகங்களை கொண்டதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம்!

சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பஞ்சாங்கம் அக்.08- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Related Articles

Popular Categories